இன்று 20 ஓவர் போட்டி: இந்தியா- ஆஸ்திரேலியா

Filed under: விளையாட்டு |

imagesஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப்போட்டி தூர்தர்சன் மற்றும் ஸ்டார் கிரிக்கெட்டில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தப்போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

யுவராஜ்சிங் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு நாங்கள் எந்தவித நெருக்கடியும் கொடுக்காமல் இருக்க முயற்சிப்போம். அவர் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்பது அனைவருக்கும் தெரியும். சிறந்த வீரரான அவர் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

ரவிந்திர ஜடேஜாவின் ஆட்டம் சிறப்பாக இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றி நான் பெரிதும் கவலைப்பட வில்லை. அவர் நல்ல  நிலைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் பனி துளி முக்கிய பங்கு வகிக்கும். இதில் கடுமையாக போராட வேண்டும். பகல்- இரவு ஆட்டத்தில் பனித்துளி அதிகமாக இருக்கும்.

இவ்வாறு டோனி கூறியுள்ளார்.