உடல் முழுக்க காயத்தோடு விடாமல் போராடும் அஸ்வின்.. மாஸ் சம்பவம்

Filed under: விளையாட்டு |


உடல் முழுக்க காயத்தோடு விடாமல் போராடும் அஸ்வின்.. மாஸ் சம்பவம்

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உடல் முழுக்க காயம் ஏற்பட்டும் கூட அஸ்வின் தொடர்ந்து போராடி வருகிறார்.

ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஐந்தாவது நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவின் அதிரடி பவுலின்கிற்கு எதிராக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் போராடும் விதம் பலரையும் கவர்ந்து உள்ளது.


அதிலும் இந்திய வீரர்கள் பலரும் காயம் அடைந்துள்ள நிலையிலும் கூட தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது


இன்று இந்திய அணியில் ஆடிய விஹாரி, பண்ட் இருவரும் காயம அடைந்துள்ளனர்.

இதில் விஹாரி காலில் காயத்தோடு தொடர்ந்து களத்தில் ஆடி வருகிறார். இன்னொரு பக்கம் எலும்பு விலகல் ஏற்பட்ட நிலையிலும் கூட ஜடேஜா பேட்டிங் இறங்குவதற்கு தயாராக இருக்கிறார்.

இன்னொரு பக்கம் உடல் முழுக்க காயம் ஏற்பட்டும் கூட அஸ்வின் தொடர்ந்து போராடி வருகிறார். இன்று இந்திய அணியில் அதிகம் காயம் அடைந்தது அஸ்வின்தான். இவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. பவுன்சரில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

அதேபோல் காலில் இரண்டு முறை பந்து பட்டு அஸ்வின் துடித்து போனார். இதனால் இடையில் இந்திய அணியின் மருத்துவர் வந்து அஸ்வினை சோதிக்கும் நிலை கூட ஏற்பட்டது. வலியில் துடித்த நிலையிலும் அஸ்வின் தொடர்ந்து களத்தில் நின்று ஆடினார். பாட்ஷா படத்தில் மாணிக்கம் உடல் முழுக்க காயத்தோடு வலியை தாங்கி குடும்பத்தை காப்பர்.

அதேபோல் இந்திய அணியை காக்க அஸ்வின் போராடி வருகிறார்கள் . அஸ்வின் அவுட்டானால் அல்லது வெளியேறினால் கையில் காயத்தோடு ஜடேஜா இறங்க வேண்டும். இதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக அஸ்வின் உயிரை கொடுத்து போராடி வருகிறார்.