ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் – டிடிவி தினகரன் !

Filed under: இந்தியா,சென்னை,தமிழகம் |

கேரள மக்களின் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மொழியால் இணைந்து கொண்டாடும் இத்திருநாளின் மூலம் சகோதரத்துவமும், ஒற்றுமையும் தழைத்தோங்கட்டும்.

‘மன்னாதி மன்னனாக இருந்தாலும், கடைகோடி குடிமகனாக இருந்தாலும் அகங்காரத்தால் எதையுமே சாதிக்க முடியாது; அன்பும் பணிவும் மட்டுமே அனைவரின் உள்ளங்களிலும் இடம்பிடிக்கும்’ என்பதை மகாபலி சக்கரவர்த்தியின் வழியாக இந்த உலகத்திற்குச் சொல்லும் ஓணம், அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கைகளையும் வழங்கட்டும். கொரோனா பேரிடரின் பாதிப்புகளில் இருந்து அனைவரும் முழுமையாக மீண்டெழுந்து ஆரோக்கியத்தோடும், ஆனந்தமாகவும் வாழ்ந்திட பொன் ஓணம் திருநாள் வழிகாட்டட்டும்.