டப்பிங்கில் களமிறங்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Filed under: சினிமா |

தமிழ் திரைப்படத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்து வருவதாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்திப் படம் இயக்குவதற்கான ஆரம்ப கட்ட வேலையில் உள்ளார். கூடிய விரைவில் இப்படத்தின் பணிகள் தொடங்கவுள்ளது. இந்நிலையில் தமிழ் படம் ஒன்றுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். டப்பிங் செய்யும்போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் நடித்த ரீமாசென் கேரக்டருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.