இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு எந்த ஒரு அறிகுறியும் காணப்படவில்லை என டெல்லி எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு குறித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்காக காணொளி வாயிலாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.
அதே நேரம் 12 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றில் 73.5 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை என டெல்லி எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.
அடுத்ததாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 38.4 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அறிகுறி இல்லாமல் வைரஸ் தொற்று ஏற்பட்டதாகவும் டெல்லி எயிம்ஸ் தெரிவித்துள்ளது.