நாயாக மாற 12 லட்சம் செலவு!

Filed under: உலகம் |

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டோகோ என்றவர் நாய்கள் மீது மிகவும் பிரியமாகவும், பாசமாகவும் இருந்துள்ளார். நாய்களை அதிகமாக பிடிக்கும் என்பதால் நாயைப் போலவே மாற முயற்சியெடுத்துள்ளார்.

நாய் உடைகள் இல்லாமல் டோகோவை பார்க்கவே முடியாது. அதுதான் டோகோதான் எனப் புகைப்படத்தை இணையத்தில் பார்த்துக் கண்டுபிடிக்கக முடியாது. நாயைப் போல் மாறுவதற்கு, டோகோ, ரூ.12 லட்சம் செலவு செய்து அந்த நாய் போன்ற உடையை வாங்கி அணிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.