பாகிஸ்தானில் மத பாடசாலையில் திடீர் குண்டு வெடிப்பு…7 சிறுவர்கள் உயிரிழப்பு

Filed under: Uncategory,உலகம் |

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள ஒரு காலனியில் ஸ்பன் ஜமாத் என்கிற மசூதி உள்ளது. இந்த மசூதியின் ஒரு பகுதியில் மதம் விஷயங்களை கற்றுக் கொடுக்கும் பாடசாலை செயல்பட்டு வருகிறது அந்த பள்ளியில் டிர் காலனி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் இஸ்லாம் வழிபாட்டுக் கல்வியை கற்று வந்தனர்.

இந்தநிலையில் அந்த மத பாடசாலையில் வழக்கம் போல இன்று காலை 80க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கல்வி பயின்று வந்தனர். காலை 8:30 மணி அளவில் கல்வி கற்றுக் கொடுத்து வந்த மசூதியின் மைய பகுதியில் திடீரென சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் மசூதி கட்டிடத்தை விட்டு வெளியே தப்பி ஓடினார்கள் ஆனாலும் இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் 70க்கும் அதிகமான சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற போலீசார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.