பார்த்திபன் படத்தின் டீசரை ரிலீஸ் செய்யும் அமிதாப் பச்சன்!

Filed under: இந்தியா,சினிமா |

இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன் இரவின் நிழல் என்ற சிங்கிள் ஷாட் படத்தை இயக்கி நடித்து வருகிறார். வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது.

இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இதில் வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். உலகளவில் இதுபோல சில படங்கள் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும் தமிழில் இதுவே முதல்முறை. பார்த்திபனின் இந்த அறிவிப்பால் தமிழ் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதை ஏ ஆர் ரஹ்மான் அறிவித்திருந்தார். இந்த படத்துக்காக நீண்ட நாட்கள் ஒத்திகை நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்நிலையில் அதன் டீசரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வெளியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.