பிபிசி ஆவணப்படத்தை பற்றி துணைவேந்தரின் அறிவிப்பு!

Filed under: இந்தியா,சென்னை |

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிபிசி ஆவண படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என டில்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் தெரிவித்துள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் நிகழ்ச்சி சென்னையில் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஜேஎன்யு துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட், ‘எதிர் கருத்து உடையவர்கள் இருப்பதால் பிபிசி ஆவணப்படத்தை எங்கள் பல்கலைக்கழகத்தில் திரையிட அனுமதிக்க முடியாது. யாருடைய தனிப்பட்ட உரிமைகளையும் நாங்கள் கேள்வி கேட்பதில்லை. எதிர் கருத்து உடையவர்கள் இருப்பதால் இந்த பிபிசி ஆவண படத்தை திரையிட அனுமதிக்க முடியாது. தொல்காப்பியம் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 10 கோடி நிதி வழங்கிய தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.