புதிய நகைக்கடையில் கைவரிசை!

Filed under: தமிழகம் |

கள்ளக்குறிச்சி அருகே புதிய நகைக்கடை திறந்து இரண்டே நாட்களில் திருடர்கள் கடையையே காலி செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கள்ளகுறிச்சி மாவட்டம் புக்கிரவாரி புத்தூர் என்ற கிராமத்தில் நகைக்கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டது. இந்நகை கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அந்த கடையில் இருந்த 281 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் அக்கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இருந்த வயர்களையும் துண்டித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நகைக்கடை திறந்த இரண்டே நாட்களில் அந்த கடை முழுவதிலும் உள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற திருடர்களால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.