மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 533 காவலர்களுக்கு கொரோனாவால் பாதிப்பு!

Filed under: இந்தியா |

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவை எதிர்த்து போராடும் காவல்துறையினரும் பெரும்பாலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 533 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த தகவலை அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்கள் எண்ணிக்கையை 17 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது. இதில் 14,269 குணம் அடைந்துள்ளனர். 180 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 3,523 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர்.