மாணவர்களுக்கு மகிழ்ச்சி உத்தரவு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு.. !

Filed under: தமிழகம் |

மாணவர்களுக்கு மகிழ்ச்சி உத்தரவு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு.. !

பொதுத்தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது . ஆனாலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பொது தேர்வை எவ்வாறு எதிர் கொள்வார்கள் என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே நிலவி வந்தது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பாட திட்டங்களை குறைத்துள்ளது.இதனையடுத்து இன்று குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. பொது தேர்வை கருத்தில் கொண்டு இவ்வாறு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.