மீண்டும் தப்பியோடிய கொரோனா நோயாளி – சென்னையில் பரபரப்பு!
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கொரோனா நோயாளி ஒருவர் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதிலும் தலைநகர் சென்னையில் தினசரி 500 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. இந்நிலையில் சென்னை கொரோனா தொற்றுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும், ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த 63 வயது நபர் ஒருவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நேற்று மருத்துவமனையில் இருந்து அவர் தப்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்த, அவரைக் கண்டுபிடிக்கும் பணியை காவலர்களும் சுகாதாரப் பணியாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர். இது போல நோயாளிகள் தப்பிச் செல்வது இதுபோல சில முறை நடந்துள்ளதால் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது போல மனோ நல சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும் என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன.