விக்ரம் மருத்துவமனையில் அனுமதி!

Filed under: சினிமா |

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விக்ரமுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்செய்தியை கேட்டதும் விக்ரம் ரசிகர்கள் மற்றும் பலர் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ChiyaanVikram என பதிவிட்டு Get Well Soon என அவருக்காக பிராத்தனை செய்கின்றனர்.