வினாத்தாள் மையங்களில் கேமரா!

Filed under: Uncategory |

தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக குறைக்கப்பட்ட பாடங்களை நடத்த பள்ளிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், திருப்புதல் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வெளியாகாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் உள்ள அறைகளில் சிசிடிவி கேமராவை அமைக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

வினாத்தாள்கள் உள்ள அறைக்கு காவலர்கள் காவல் பணியில் இருக்க வேண்டும். இரட்டை பூட்டுகள் கொண்டு வினாத்தாள் அறை பூட்டப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.