விராட் கோலி சகோதரரின் பதிவு!

Filed under: விளையாட்டு |

இந்திய வீரர் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகி உள்ளார். இத்தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோலி அதில் இடம்பெற்றிருந்தார்.

கோலி விலகியதற்குக் காரணம் அவரின் தாயார் சரோஜ் கோலியின் உடல்நலக் குறைவுதான் காரணம் என்று கூறப்படுகிறது. கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. தன் தாயார் கூட இருக்க விரும்பும் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகவுள்ளதாக தற்போதைய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இது சம்மந்தமாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி, இதுகுறித்து, “எல்லோருக்கும் வணக்கம், என்னுடைய தாயாரின் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகள் பற்றி எனக்கு தெரிய வந்தது. என்னுடைய தாயார் நலமாக இருக்கிறார். ஊடகங்கள் உள்பட அனைவருக்கும் என் தாய் பற்றி எந்த வதந்தியைப் பரப்பவேண்டாம் என வேண்டிக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.