2 இளைஞர்களை தாக்கிய செவிலியர்கள்!

Filed under: இந்தியா |

செவிலியர்கள் 2 இளைஞர்கள் மருத்துவமனையைப் புகைப்படம் எடுத்த காரணத்தினால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில், முதலமைச்சர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தியாவில் மிகவும் பின்தங்கிய பகுதிகளாக இது அறியப்படும் நிலையில் இங்குள்ள சுகாதாரம், மருத்துவவசதிகள் உள்ளிட்டவை பற்றி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. பீகார் மாநிலத்தில் உள்ள சப்ரா பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு அரசு மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லாததை அங்குள்ள இரு இளைஞர்கள் புகைப்படம் எடுத்ததாகத் தெரிகிறது. இதைப் பார்த்த அங்கு பணியாற்றும் செவிலியர்கள், அவர்கள் இருவரையும் பிடித்து, லத்தியால் அவர்களை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.