400 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும் சென்ட்ரல் ரயில் நிலையம்

Filed under: சென்னை |

நடைபாதை, நீரூற்றுகள், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் என சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட உள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியை வெளியிட்டுள்ளது.

அதுகுறித்து அந்த செய்தியில், “சென்னை சென்ட்ரல், நகரத்தின் வழியாகச் செல்லும் 6 ரயில் பாதைகளின் சந்திப்பில் அமைந்துள்ளது. 3 புறநகர், ஒரு எம்.ஆர்.டி.எஸ் மற்றும் இரண்டு மெட்ரோ ரயில் பாதைகள் அமைந்துள்ளன. இப்போது 400 கோடி ரூபாய் மதிப்பிலான சென்ட்ரல் ஸ்கொயர் திட்டத்தின் ஒரு பகுதியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க இடமானது, நீரூற்று, எஸ்கலேட்டர் போன்றவற்றுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட பாதாசாரிகளுக்கான பகுதியில் பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க இருக்கைகள் உள்ளன.
சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு முன்பாக வணிக பயன்பாட்டிற்காக இரட்டை கோபுரங்கள் கட்டப்படும். 2,000 கார்கள் பயணிக்கும் வகையில் மூன்று நிலைகளில் நிலத்தடி பார்க்கிங் அமைக்கப்பட உள்ளது.
சென்னை மத்திய சதுக்கம் 1.54 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வருகிறது,” எனத் தெரிவிக்கிறது.