பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 860 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்துக்கு மேல் உள்ளது.
பின்னர் ஒரே நாளில் 990 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் தான் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கொரோன வைரசால் 25 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.