சென்னையில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்த நோயாளிகளில் 81% குணமடைந்தனர்!

Filed under: சென்னை |

உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தமிழ்நாட்டில் தினதோறும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

இதில் சென்னையில் இதுவரை 87,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 14,56 பேர் பலியாகியுள்ளனர். தற்போது சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், பிற மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இதுவரை 70 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். இதனால் இதன் விகிதம் 81 சதவீதமாகவும் மற்றும் உயிரிழப்பு விகிதம் 1.67 சதவீதமாகவும் இருக்கிறது.

மேலும், சென்னையில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்த நோயாளிகள் 15,127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.