அய்யா வைகுண்டர் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்த கருத்தில் எந்த தவறும் கிடையாது.
அகிலத்திரட்டு என்ன கூறுகிறதோ அதை தான் ஆளுநர் தெரிவித்துள்ளார். சாமிதோப்பில் இருந்து சிலர் சுய லாபத்திற்காக ஆளுநர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் அகிலத்திரட்டை சரியாக படிக்கவில்லை என அர்த்தம் அது மட்டுமல்ல அவர்கள் திமுகவின் பிண்ணனியில் இருபதாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அய்யாவழி அன்பாலய நிறுவனர் சிவச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பரபரப்பு பேட்டி.