மிஷ்கினின் இயக்கும் அடுத்த படத்தை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!

Filed under: சினிமா |

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தை பற்றி செப்டம்பர் 20ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதாக அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் தெரிவித்த படி இன்று அதிகாலை 12 மணிக்கு அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இயக்குனர் மிஷ்கின் அடுத்து “பிசாசு 2” இயக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் தேதி மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஆறு வருடங்களுக்கு பின்பு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளார். பிசாசு 2 படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க உள்ளார். இதை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கப்போவதகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மத தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.