பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் மற்றும் அவருடைய மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் அமிதாப்பச்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அவருடைய ட்விட்டரில் தெரிவித்தார். அந்த பதிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்பு அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வருவதற்காக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து அவருடைய மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அபிஷேக் பச்சனின் மனைவியும் மற்றும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் அவருடைய எட்டு வயது மகளான ஆராத்யாவிற்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.