Home » Entries posted by admin (Page 10)
Entries posted by admin

ஓபிஎஸ் மனைவி மறைவு – முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

Comments Off on ஓபிஎஸ் மனைவி மறைவு – முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை துணை எதிர்கட்சி தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள விஜயலட்சுமி உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, உதயநிதி எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் உடனிருந்தனர். அவரது மறைவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ” தமிழகத்தின் […]

Continue reading …

உலக சாதனை படைத்த சுமித் அண்டில்!

Comments Off on உலக சாதனை படைத்த சுமித் அண்டில்!

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீரர் சுமித் அண்டில். டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பலரும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களுடன் 34ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் 68.55 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து உலக சாதனை படைத்துள்ளதுடன் தங்க பதக்கத்தையும் உறுதிப்படுத்தியுள்ளார். […]

Continue reading …

டோக்கியோ பாராலிம்பிக்சில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து!

Comments Off on டோக்கியோ பாராலிம்பிக்சில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டோக்கியோ பாராலிம்பிக்சில் வெற்றி பெற்றவர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி :   தேசிய விளையாட்டு நாளன்று டோக்கியோ பாராலிம்பிக்சில் இந்தியாவுக்குப் பதக்க மழை பொழிகிறது. உயரம் தாண்டுதல் மற்றும் வட்டு எறிதலில் ஆசிய சாதனையுடன் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள நிஷாத் குமார், வினோத் குமார் ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continue reading …

உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ‘விக்ரஹா’ அதி நவீன ரோந்துக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

Comments Off on உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ‘விக்ரஹா’ அதி நவீன ரோந்துக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட இந்திய கடலோர காவல் படை கப்பலான விக்ரஹாவை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், தற்சார்பு இந்தியாவை நோக்கிய முக்கிய நடவடிக்கைகளில் இது ஒன்று என்றும், புதிய கப்பல் வடிவமைப்பு முதல் கட்டமைப்பு வரை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டதென்றும் கூறினார். இந்திய ராணுவ வரலாற்றில் முதன் முறையாக ஒன்று அல்லது இரண்டு கப்பல்களுக்காக அல்லாமல், 7 கப்பல்களுக்கான ஒப்பந்தம் தனியார் துறை நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டுள்ளது. […]

Continue reading …

பார்த்திபன் படத்தின் டீசரை ரிலீஸ் செய்யும் அமிதாப் பச்சன்!

Comments Off on பார்த்திபன் படத்தின் டீசரை ரிலீஸ் செய்யும் அமிதாப் பச்சன்!

இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன் இரவின் நிழல் என்ற சிங்கிள் ஷாட் படத்தை இயக்கி நடித்து வருகிறார். வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இதில் வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். உலகளவில் இதுபோல […]

Continue reading …

உச்சநீதிமன்ற நீதிபதியாகும் சுந்தரேஷ் வரலாற்று தீர்ப்புகளை வழங்க வாழ்த்துகள் – மருத்துவர் ராமதாஸ் !

Comments Off on உச்சநீதிமன்ற நீதிபதியாகும் சுந்தரேஷ் வரலாற்று தீர்ப்புகளை வழங்க வாழ்த்துகள் – மருத்துவர் ராமதாஸ் !

சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதியரசரான எம்.எம்.சுந்தரேஷ் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக  நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் ஒரு நீதியரசர் உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்று சென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த சில நாட்களில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள 33 நீதிபதிகள் பணியிடங்களில் 10 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் நோக்கத்துடன் 9 நீதிபதிகளை மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரையுடன் மத்திய அரசு நியமித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள […]

Continue reading …

மேக்கேத்தாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை!

Comments Off on மேக்கேத்தாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை!

மேக்கேதாட்டில் கர்நாடகம் அணை கட்டினால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குக் கர்நாடகத்திலிருந்து திறக்க வேண்டிய தண்ணீரை மட்டுமின்றி, அம்மாநில அணைகளிலிருந்து மிகையாக வெளியேறும் காவிரி வெள்ள நீரையும் கர்நாடக அரசு தேக்கிக் கொள்ளும். இதன் காரணமாகவே, மேக்கேத்தாட்டில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால்,  தமிழ்நாட்டின் தொடர் எதிர்ப்பையும் மீறி,  மேக்கேத்தாட்டிற்கு அனுமதி அளிக்கும் வேலைகளை இந்திய அரசு […]

Continue reading …

500 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்க இலக்கு – சு.வெங்கடேசன் எம்.பி!

Comments Off on 500 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்க இலக்கு – சு.வெங்கடேசன் எம்.பி!

கல்விக்கட்டணம் செலுத்த இயலாமல் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிற மாணவர்களுக்கு உயர்கல்வி கொடுப்பது அரசின் கடமை. அதற்கான முறையில் கல்விக்கடன் திட்டத்தை உருவாக்கி அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டியது அதன் படிநிலைகளுள் முதலானது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டில் மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்கப்படும் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் கல்விக் கனவுகளை பாதித்துள்ளது. எனவே இது குறித்து மதுரை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை […]

Continue reading …

சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்த எண்ணுவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல்!

Comments Off on சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்த எண்ணுவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல்!

தமிழ்நாட்டிலுள்ள 14 சுங்கச்சாவடிகளிலும் 8 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்துவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருப்பதாகவும், அது செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருமெனவும் வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலையை நாடெங்கிலும் பன்மடங்காக உயர்த்தி, அத்தியாவசியப்பொருட்களின் கட்டற்ற விலையேற்றத்திற்கு வழிவகுத்துவிட்டு, சமையல் எரிகாற்று உருளையின் விலையையும் அதிகரிக்கச்செய்துவிட்டு, இப்போது சுங்கச்சாவடிக் கட்டணத்தையும் உயர்த்த எண்ணும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் வன்செயல் பெரும் சினத்தையும், கடும் […]

Continue reading …

புதிய மின்மாற்றியை திறந்துவைத்தார் உதயநிதி ஸ்டாலின்!

Comments Off on புதிய மின்மாற்றியை திறந்துவைத்தார் உதயநிதி ஸ்டாலின்!

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையிலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையிலும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் புதிய TISA சுற்றுத் தர அமைப்பு மற்றும் புதிய மின்மாற்றியை நீல கடற்கரை சாலை, நீலாங்கரையில் இன்று (25.08.2021) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்கள். சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், இயக்குநர் மின் பகிர்மானம் சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் கலந்து கொண்டனர். கடந்த 2015 முதல் […]

Continue reading …