Home » Entries posted by admin (Page 11)
Entries posted by admin

500 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்க இலக்கு – சு.வெங்கடேசன் எம்.பி!

Comments Off on 500 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்க இலக்கு – சு.வெங்கடேசன் எம்.பி!

கல்விக்கட்டணம் செலுத்த இயலாமல் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிற மாணவர்களுக்கு உயர்கல்வி கொடுப்பது அரசின் கடமை. அதற்கான முறையில் கல்விக்கடன் திட்டத்தை உருவாக்கி அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டியது அதன் படிநிலைகளுள் முதலானது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டில் மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்கப்படும் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் கல்விக் கனவுகளை பாதித்துள்ளது. எனவே இது குறித்து மதுரை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை […]

Continue reading …

சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்த எண்ணுவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல்!

Comments Off on சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்த எண்ணுவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல்!

தமிழ்நாட்டிலுள்ள 14 சுங்கச்சாவடிகளிலும் 8 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்துவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருப்பதாகவும், அது செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருமெனவும் வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலையை நாடெங்கிலும் பன்மடங்காக உயர்த்தி, அத்தியாவசியப்பொருட்களின் கட்டற்ற விலையேற்றத்திற்கு வழிவகுத்துவிட்டு, சமையல் எரிகாற்று உருளையின் விலையையும் அதிகரிக்கச்செய்துவிட்டு, இப்போது சுங்கச்சாவடிக் கட்டணத்தையும் உயர்த்த எண்ணும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் வன்செயல் பெரும் சினத்தையும், கடும் […]

Continue reading …

புதிய மின்மாற்றியை திறந்துவைத்தார் உதயநிதி ஸ்டாலின்!

Comments Off on புதிய மின்மாற்றியை திறந்துவைத்தார் உதயநிதி ஸ்டாலின்!

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையிலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையிலும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் புதிய TISA சுற்றுத் தர அமைப்பு மற்றும் புதிய மின்மாற்றியை நீல கடற்கரை சாலை, நீலாங்கரையில் இன்று (25.08.2021) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்கள். சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், இயக்குநர் மின் பகிர்மானம் சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் கலந்து கொண்டனர். கடந்த 2015 முதல் […]

Continue reading …

ரக்ஷாபந்தன் – குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து!

Comments Off on ரக்ஷாபந்தன் – குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து!

ரக்ஷாபந்தன் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது: “ரக்ஷாபந்தன் என்ற புனித தருணத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது சமூகத்தில் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான அன்பு மற்றும் பாசத்தின் வலுவான பிணைப்பை ரக்ஷாபந்தன் பண்டிகை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஒரு சகோதரர் மற்றும் ஒரு சகோதரிக்கு இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்பு, பரஸ்பர மரியாதை மற்றும் கருணையில் அமைந்துள்ள இந்த தனித்துவம் வாய்ந்த பந்தத்தை ரக்ஷாபந்தன் கௌரவிக்கிறது. நமது சமூகத்தில் பெண்களுக்கு பாரம்பரியமாக அளிக்கப்படும் உயர்ந்த நிலையையும் இந்த திருநாள் நமக்கு நினைவூட்டுகிறது. இந்தத் தருணத்தில் நம் நாட்டில் உள்ள பெண்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், அவர்களுக்கு மரியாதை செலுத்தவும் நம்மை நாமே மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம். ரக்ஷாபந்தன் என்ற புனித திருநாளன்று நம் நாட்டு குடிமக்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

Continue reading …

கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

Comments Off on கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 23.08.2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தில் மாவட்ட வாரியாக நோய்த்தொற்றுப் பரவலின் தன்மை,  அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இன்று (21.08.2021)  தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. […]

Continue reading …

கொள்ளை போன 37 சவரன் நகை மீட்பு !

Comments Off on கொள்ளை போன 37 சவரன் நகை மீட்பு !

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் அடுத்தடுத்து குணசேகரன், வெங்கடேசன், சிவகாமி ஆகியோர் வீடுகளில் கொள்ளை அடித்த 37 சவரன் தங்க நகை மீட்பு. திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த மனோஜ் மற்றும் சரத் ஆகியோர் கைது செய்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் நடவடிக்கை.

Continue reading …

வைகுண்டராஜன் மீது வழக்குப்பதிவு !

Comments Off on வைகுண்டராஜன் மீது வழக்குப்பதிவு !

தூத்துக்குடியில் சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து சட்டவிரோதமாக தாது மணல் எடுத்துச் சென்றது தொடர்பாக, விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடல் மண்ணில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட தாது மணலை பதுக்கி வைக்கவோ, ஏற்றுமதி செய்யவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கிடையில், கடந்த 2017-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வி.வி.மினரல், பி.எம்.சி., ஐ.எம்.சி. உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் சோதனை மேற்கொண்டதில், கார்னைட், இல்மனைட், ஜிர்கான் மற்றும் ரூட்டைல் ஆகிய தாது […]

Continue reading …

ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் – டிடிவி தினகரன் !

Comments Off on ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் – டிடிவி தினகரன் !

கேரள மக்களின் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மொழியால் இணைந்து கொண்டாடும் இத்திருநாளின் மூலம் சகோதரத்துவமும், ஒற்றுமையும் தழைத்தோங்கட்டும். ‘மன்னாதி மன்னனாக இருந்தாலும், கடைகோடி குடிமகனாக இருந்தாலும் அகங்காரத்தால் எதையுமே சாதிக்க முடியாது; அன்பும் பணிவும் மட்டுமே அனைவரின் உள்ளங்களிலும் இடம்பிடிக்கும்’ என்பதை மகாபலி சக்கரவர்த்தியின் வழியாக இந்த உலகத்திற்குச் சொல்லும் ஓணம், அனைவரின் வாழ்விலும் […]

Continue reading …

துன்பங்கள் மறைந்து, இன்பங்கள் நிறைய ஓணம் திருநாள் வழி காட்டட்டும் – மருத்துவர் இராமதாசு

Comments Off on துன்பங்கள் மறைந்து, இன்பங்கள் நிறைய ஓணம் திருநாள் வழி காட்டட்டும் – மருத்துவர் இராமதாசு

மக்களை நேசித்த மன்னன் மகாபலி மக்களைச் சந்திக்க வரும்  திருவோணம் திருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள மலையாள மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாமணனால் பாதாளத்தில் தள்ளப்பட்ட மகாபலி மன்னன் ஆண்டுக்கு ஒருமுறை வெளியே வந்து தமது மக்களைச் சந்திக்கச் செல்லும் நிகழ்வு தான் திருவோணம் திருநாளாக  கொண்டாடப்படுகிறது. மன்னன் மகாபலியின் வருகை மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்வாகும். இந்த நாள் மகாபலி  மன்னனை மட்டும் வரவேற்பதற்கான நாள் அல்ல… வாழ்க்கையில் நாம் அனுபவித்து […]

Continue reading …

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது – வேல்முருகன்!

Comments Off on உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது – வேல்முருகன்!

மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், தமிழ் வரலாற்று ஆவணங்கள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. 1966 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் அளவீட்டு துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் மொழிவாரியாகவும், அகரவரிசைப்படியும், எண்ணிக்கையின்படியும் வகைப்படுத்தியதில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் கல்வெட்டுகள் தான் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, 1966 ஆம் ஆண்டில்,  தமிழில் 20000 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. கன்னடம் 10,600,  சமஸ்கிருதம் 7,500, தெலுங்கு […]

Continue reading …