நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள மோதலைத் தவிர்க்க நடவடிக்கை! – சீமான் கோரிக்கை கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள முரண்கள் தொடர்பாக நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களிடம் எழுந்திருக்கும் மோதல் போக்கும், நிகழ்ந்தேறிய வன்முறையும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு மீன்வளச் சட்ட வரைவை அவசரகதியில் நிறைவேற்றத்துடிக்கும் இக்கொடுஞ்சூழலில், அதற்கெதிராக மீனவ மக்கள் ஓரணியில் திரள வேண்டிய தேவையிருக்கையில், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிப்பில் உள்ள […]
Continue reading …நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை அடியொற்றியது போலத் தயாரிக்கப்பட்ட வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள இயற்கை சார்ந்த முன்னெடுப்புகளையும், வேளாண்மை சார்ந்த திட்டங்களையும் வெறுமனே வெளித்தோற்ற அரசியலுக்காகப் பயன்படுத்தாது உளப்பூர்வமாகச் செயலாக்கத்திற்குக் கொண்டுவர உழைக்க வேண்டும்! – சீமான் அறிவுறுத்தல் தமிழகத்தில் முதன்முறையாக வேளாண்துறைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டிருப்பதை உளப்பூர்வமாக ஏற்று வரவேற்கிறேன். வேளாண்மைக்கு முன்னுரிமை தர வேண்டுமென்பதை வலியுறுத்தி, அதற்கெனத் தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கருத்தாக்கத்தை நாம் தமிழர் […]
Continue reading …“உழுது உண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுது உண்டு பின்செல் பவர்” அதாவது, உழவுத் தொழிலைச் செய்து அதனால் விளையும் பொருளை உண்டு உயிர் வாழ்கிறவர்களே வாழ்பவர்கள். மற்றவர்கள் எல்லாம் பிறரை வணங்கி அவர் கொடுப்பதை உண்டு ஏவல் செய்து பிழைக்கும் அடிமைகள் ஆவார்கள் என்பது திருவள்ளுவரின் வாக்கு. அதன் அடிப்படையில் வேளாண்மையும், அதன் முக்கியத்துவத்தையும் நன்கு உணர்ந்து, தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
Continue reading …காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள 15 சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.13.50 கோடி மதிப்பீட்டில் 3,04,627 மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அன்று (14.08.2021) மரக்கன்றுகளை நட்டுவைத்து தொடங்கி வைத்தார். தொழில்துறையில் இந்திய துணைக்கண்டத்திலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மேம்படுத்தும் தொலைநோக்கு பார்வையுடன், 1971 ஆம் ஆண்டிலேயே, அயராது உழைத்து தொழிற்பூங்காவின் உருவாக்கத்திற்கு தொடக்கப்புள்ளி வைத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் ஆவார். அன்று கலைஞர் தொடங்கிய தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) […]
Continue reading …இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் அடையாளமாகத் திகழும் செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்தநாள் நூற்றி ஐம்பதாவது ஆண்டு வரும் செப்டம்பர் 5&ஆம் தேதி தொடங்குகிறது. தன்னை வருத்திக் கொண்டும், தமது செல்வங்களை இழந்தும் இந்திய விடுதலைக்காக போராடிய ஈடு இணையற்ற தலைவருக்கு மரியாதை செலுத்த இது சிறந்த வாய்ப்பாகும். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை மிகக்கடுமையாக எதிர்த்த தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆவார். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்த […]
Continue reading …அண்மையில் கொண்டுவரப்பட்ட நடைமுறையின்படி, காவலர்கள் வாரத்தில் ஒருநாள் விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியம் பிடித்தம் செய்யப்படுகிறது எனும் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். ஓய்வின்றித் தொடர் காவல் பணியில் ஈடுபடும் காவலர்களது உடற்சோர்வு, மனஅழுத்தத்தைப் போக்கவும், குடும்பத்தோடு செலவிட அவர்களுக்கு நேரத்தை வழங்கும் விதமாகவும் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுப்பு வழங்க வேண்டுமெனத் தொடர்ச்சியாக நாங்கள் முன்வைத்த கோரிக்கை முழக்கத்திற்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கிறார்களென நம்பி, அரசுக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தவேளையில், அவ்விடுப்பு எடுப்பதற்கு ஊதியப்பிடித்தம் செய்யப்படும் செய்தி […]
Continue reading …தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் இராமமூர்த்தி உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்ட திரு. இராமமூர்த்தி அவர்கள், அக்கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் உழைத்தார். 1990-களின் பிற்பகுதியில், காங்கிரசிலிருந்து மூப்பனார் பிரிந்து சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியதால், காங்கிரஸ் வலுவிழந்து இருந்த நிலையில் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று சிறப்பாக வழிநடத்தினார். காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை […]
Continue reading …“தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்” என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பிற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில். “ வரலாற்று சிறப்புமிக்க வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கும் தமிழக அரசுக்கு பாராட்டுகள். மிக தொன்மையான வேளாண் பாரம்பரியம் கொண்ட, இயற்கை விவசாயத்தில் முன்னோடியான தமிழகம் இதன்மூலம் மகத்தான பொருளாதார, சுற்றுச்சூழல், ஆரோக்கிய பலன்களை நிச்சயம் பெறும். வாழ்த்துகள் @mkstalin ” என்று […]
Continue reading …ஒதிஷா மாநிலத்தின் புனித நகரமான பூரியில் குழாய்கள் மூலம் ஐ.எஸ்.ஓ 10500 தரம் கொண்ட மிகவும் தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வீட்டு குடிநீர் குழாய்களிலும், பொது குடிநீர் குழாய்களிலும் புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுவதை விட சுவையான, தரமான குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது நமக்கு ஏக்கத்தை ஏற்படுத்தும் செய்தி தான். இதற்குக் காரணமான நவீன் பட்நாயக் தலைமையிலான ஒதிஷா அரசு பாராட்டுகளுக்குரியது. உலகில் லண்டன், நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் தான் […]
Continue reading …முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான திரு. திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதுபெரும் காங்கிரஸ் தலைவராக, தேசிய நீரோட்டத்தில் கலந்து- அக்கட்சியின் தேசிய அரசியல் தலைவர்கள் அனைவராலும் அறியப்பட்ட திரு. திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள், மாநிலங்களவை உறுப்பினராகவும் […]
Continue reading …