Home » Entries posted by admin (Page 15)
Entries posted by admin

எல்லைகளில் கட்டமைப்புப் பணிகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பரிசீலனை!

Comments Off on எல்லைகளில் கட்டமைப்புப் பணிகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பரிசீலனை!
எல்லைகளில் கட்டமைப்புப் பணிகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பரிசீலனை!

நாட்டின் எல்லைப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று உயர்நிலைக் கூட்டம் ஒன்றுக்கு தலைமை வகித்து பரிசீலனை செய்தார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை செயலர் டாக்டர் அஜய்குமார் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். எல்லைப்பகுதிகளில் முன்னிலைத் தொடர்புகளின் நிலை குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், எல்லைப் பகுதிகளில் முக்கியமான சாலைகளையும், பாலங்களையும், சுரங்கங்களையும் அமைப்பதை விரைவுபடுத்துவதன் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 2018-19 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2019-2020 நிதியாண்டில் எல்லைப் பகுதி சாலைகளில் 30 சதவிகிதம் அதிகமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவிட் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் […]

Continue reading …

நாகூர் அருகே இளைஞர் கொலை !

Comments Off on நாகூர் அருகே இளைஞர் கொலை !
நாகூர் அருகே இளைஞர் கொலை !

நாகை, ஜூலை 8 நாகை மாவட்டம் பனங்குடி அரிசி சேமிப்பு கிடங்கு பின்புறம் உள்ள திடலில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக நாகூர் போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டபோது, மேல வாஞ்சூர் பகுதியை சேர்ந்த பகுருதீன் என்பவருடைய மகன் அசாருதீன் (19) என்ற இளைஞர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தபட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நாகூர் காவல்நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து […]

Continue reading …

பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – டாக்டர் குழந்தைசாமி !

Comments Off on பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – டாக்டர் குழந்தைசாமி !
பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – டாக்டர் குழந்தைசாமி !

சென்னை, ஜூலை 03 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். இதன் மூலம் 80% வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலாம், அடிக்கடி கை கழுவும் பழக்கம் இல்லாத குளிர் பிரதேச நாடுகளில்தான் வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை மக்கள் கடைப்பிடிக்கும் காரணத்தால் இந்தியாவில் தொற்று குறைவாக உள்ளது. ஆகவே மக்கள் கூடுகின்ற பொது இடங்கள் அனைத்திலும் அரசு கைகழுவும் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். சேனிடைசர் பயன்படுத்துவது எதிர்பார்த்த பலனை தராது. பொதுமக்கள் […]

Continue reading …

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை !

Comments Off on பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை !
பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை !

கொரொனா தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய அரசு தளர்வுகளுடன் கூறிய ஊரடங்கு அறிவித்திருந்த அமலில் உள்ள நிலையில் இன்றுடன் இந்த ஊரடங்கு முடியவுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு வரும் ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில், பள்ளிகள், கல்லூரிகளுக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே செல்லத் தடை விதிக்கப்படுவதாகவும் […]

Continue reading …

பிரதமர் மட்டும் சீன நிதியை பெறலாமா? – ப.சிதம்பரம்!

Comments Off on பிரதமர் மட்டும் சீன நிதியை பெறலாமா? – ப.சிதம்பரம்!
பிரதமர் மட்டும் சீன நிதியை பெறலாமா? – ப.சிதம்பரம்!

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சீன நிறுவனங்களிடம் நிதி பெற்றதாக பாஜக தெரிவித்துள்ள குற்றச்சாட்டிற்கு பதில் கேள்வி கேட்டுள்ளார் ப.சிதம்பரம். லடாக் எல்லையில் சீன – இந்தியா ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து மத்தியில் ஆளும் பாஜக மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி. இந்நிலையில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது சீன நிறுவனங்களிடம் ஏராளமாக நிதி வாங்கியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் சார்பில் விளக்கமளிக்கப்படாத நிலையில் பதில் குற்றச்சாட்டை வைத்துள்ளார் […]

Continue reading …

குவிந்த குற்றச்சாட்டுகள்: தப்பியோடிய காவல் ஆய்வாளர்!

Comments Off on குவிந்த குற்றச்சாட்டுகள்: தப்பியோடிய காவல் ஆய்வாளர்!
குவிந்த குற்றச்சாட்டுகள்: தப்பியோடிய காவல் ஆய்வாளர்!

ஜூன் 27 வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நகர காவல் நிலையத்தின் ஆய்வாளராக, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது திருநாவுக்கரசு பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதும், மணல்கடத்தல், காட்டன் சூதாட்டம் என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, கரன்சிகள் குவித்து வந்தார். ராணிப்பேட்டை தனி மாவட்டமாக உருவான பிறகு, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மயில் வாகனத்தை ஏமாற்ற முடியாமல், பல குற்றச்சாட்டுகளில் ஆதாரங்களுடன் சிக்கிக்கொண்டார். இதற்கிடையே, பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கியுள்ள, வி.சி., கட்சி பிரமுகர் நரேஷ் 007 தனிப் படையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் […]

Continue reading …

ரஷ்யாவில் நடைபெற்ற வெற்றி தினப் படை அணிவகுப்பில் இந்திய இராணுவ படைப் பிரிவு பங்கேற்றது!

Comments Off on ரஷ்யாவில் நடைபெற்ற வெற்றி தினப் படை அணிவகுப்பில் இந்திய இராணுவ படைப் பிரிவு பங்கேற்றது!
ரஷ்யாவில் நடைபெற்ற வெற்றி தினப் படை அணிவகுப்பில் இந்திய இராணுவ படைப் பிரிவு பங்கேற்றது!

ஜூன் 24 1941-1945 ஆம் ஆண்டு காலத்தில், அப்போதைய சோவியத் மக்களால், போரின் போது கிடைத்த வெற்றியின் எழுபத்தைந்தாவது ஆண்டு விழாவை ரஷ்யா கொண்டாடுகிறது. 24 ஜூன் 2020 அன்று மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற, வெற்றி தின அணிவகுப்பில் இந்திய இராணுவப் படையினர் பங்கேற்றனர். அனைத்து அணிகளையும் சேர்ந்த 75 பேர் கொண்ட இந்திய இராணுவப் படையின் முப்படை சேவை பிரிவு, ரஷ்ய இராணுவபடை மற்றும் 17 பிற நாடுகளின் படையினருடன் அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இரண்டாம் உலகப் போரின்போது, மிகப்பெரிய […]

Continue reading …

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குனர் ஷாஜி தாமஸ், சாஸ்திரி இந்தோ-கனடிய கழக தலைவராகத் தேர்வு!

Comments Off on திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குனர் ஷாஜி தாமஸ், சாஸ்திரி இந்தோ-கனடிய கழக தலைவராகத் தேர்வு!
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குனர் ஷாஜி தாமஸ், சாஸ்திரி இந்தோ-கனடிய கழக  தலைவராகத் தேர்வு!

திருச்சி, ஜூன் 21 திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குனர் சாஸ்திரி இந்தோ-கனடிய கழக தலைவராகத் தேர்வு சாஸ்திரி இந்தோ-கனடிய கழகத்தின் (SICI) வருடாந்திர சந்திப்பு இந்தாண்டு ஜுன் மாதம் 20 தேதி நடைபெற்றது. இதில் கல்லூரி இயக்குனர் முனைவர் மினி ஷாஜி தாமஸ் இந்தாண்டு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாஸ்திரி இந்தோ-கனடிய கழகமானது இந்தியா மற்றும் கனடா நாடுகளின் கல்வி, அரசு, குடியியல் மற்றும் தொழில் துறைகளில் வளர்ச்சியடையும் வகையில் ஆராய்ச்சி மற்றும் கருத்தரங்குகள் அமைப்பதில் […]

Continue reading …

யோகா செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் – சத்குரு

Comments Off on யோகா செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் – சத்குரு
யோகா செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் – சத்குரு

 ஜூன் 20 கொரோனா பாதிப்பு மிகுந்த இந்த நெருக்கடியான சமயத்தில் யோகப் பயிற்சிகள் செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சத்குருவின் வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள். கடந்த சில மாதங்களாக உலகம் கொரோனா வைரஸ் என்ற மாபெரும் சவாலை எதிர்கொண்டு […]

Continue reading …

மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளர் படுகாயம்!

Comments Off on மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளர் படுகாயம்!
மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளர் படுகாயம்!

நாகப்பட்டினம்,ஜூன் 19 நாகப்பட்டினம் அருகே வேளாங்கன்னி மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிபவர் வினோத். நேற்று தெற்கு பொங்கைநல்லூரில் மின்கசிவு பழுதுபார்க்கும் போது மின்சாரம் தாக்கி படுகாயத்துடன் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதனை தொடர்ந்து இளநிலை பொறியாளர் மீது வேளாங்கன்னி போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Continue reading …