Home » Entries posted by admin (Page 18)
Entries posted by admin

கம்போடிய பிரதமருடன் மோடி உரையாடல்!

Comments Off on கம்போடிய பிரதமருடன் மோடி உரையாடல்!
கம்போடிய பிரதமருடன் மோடி உரையாடல்!

புது டெல்லி, ஜூன்  11 பிரதமர் நரேந்திர மோடி, கம்போடிய பிரதமர் சம்டெக் அக்கா மொஹா சேனா படேய் டெகோ ஹுன் சென்னுடன் தொலைபேசியில் இன்று உரையாடினார். கொவிட்-19 பெருந்தொற்று குறித்து இரண்டு தலைவர்களும் விவாதித்தனர். இருநாடுகளிலும் உள்ள கம்போடிய, இந்திய குடிமக்களுக்கு தொடர்ந்து உதவவும், அவர்கள் தாய்நாட்டுக்கு திரும்ப வசதி ஏற்படுத்தித் தரவும், இருவரும் ஒப்புக்கொண்டனர். ஆசியான் அமைப்பின் முக்கிய உறுப்பினரும், இந்தியாவுடன் நாகரீக மற்றும் கலாச்சார உறவுகளை கொண்டிருக்கும் நாடுமான கம்போடியாவுடனான உறவை, மேலும் […]

Continue reading …

30 ஆண்டு சிறைக்கொடுமை போதாதா? 7 தமிழர்களை உடனே விடுதலை செய்க – மருத்துவர் இராமதாஸ்!

Comments Off on 30 ஆண்டு சிறைக்கொடுமை போதாதா? 7 தமிழர்களை உடனே விடுதலை செய்க – மருத்துவர் இராமதாஸ்!
30 ஆண்டு சிறைக்கொடுமை போதாதா? 7 தமிழர்களை உடனே விடுதலை செய்க – மருத்துவர் இராமதாஸ்!

சென்னை, ஜூன்  11 இராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், அந்த வழக்கில் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்து 30-ஆவது ஆண்டு தொடங்குகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்றமே ஆணையிட்டும், அந்த விஷயத்தில் தமிழக ஆளுனர் முடிவெடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். இராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளனிடம் சிறிய விசாரணை நடத்த வேண்டி […]

Continue reading …

திருக்கோயில்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள், சட்டசபை அறிவிப்புகள் – அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் காணொலி காட்சி மூலம் ஆய்வு !

Comments Off on திருக்கோயில்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள், சட்டசபை அறிவிப்புகள் – அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் காணொலி காட்சி மூலம் ஆய்வு !

சென்னை, ஜூன் 10 சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று (10.06.2020) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத் துறையின் சார்நிலை அலுவலர்களுடன் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திருக்கோயில்களுக்கான மேம்பாட்டுப் பணிகள் குறித்து இணைய வழி காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது, சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வரால் அறிவிக்கப்பட்ட திருக்கோயில்களுக்கான வளர்ச்சித்திட்டப்பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்றி […]

Continue reading …

சத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்!

Comments Off on சத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்!
சத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்!

’ஞானியுடன் ஒரு உரையாடல்’ என்னும் தலைப்பில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுடன் பல்வேறு அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், நிறுவனத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என வாழ்வின் பல்வேறு நிலைகளில் முன்னணியில் உள்ளோர் தொடர்ந்து உரையாடி வருகின்றனர். அதன் ஒரு தொடர்ச்சியாக,  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரரான திரு.ரவிச்சந்திரன் அஸ்வின், சத்குருவுடன் ’ஆன்லைன்’ வழியாக  கிரிக்கெட், கரோனோ, காவேரி என்னும் தலைப்பில் கலந்துரையாடினார். அப்போது அவர் கிரிக்கெட் மற்றும் விளையாட்டு சார்ந்த கேள்விகளுடன்  விவசாயிகளின் […]

Continue reading …

மதுரை மாணவி நேத்ராவிற்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு!

Comments Off on மதுரை மாணவி நேத்ராவிற்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு!
மதுரை மாணவி நேத்ராவிற்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு!

சென்னை, ஜூன் 6 மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசோடு இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், தன்னார்வலர்களும் கொரோனா நிவாரணப் பணியில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலமடை, வண்டியூர் மெயின் ரோடு, முடிதிருத்தகம் நடத்தி வரும் மோகன் என்பவர், தனது மகள் செல்வி நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை தனது மகளின் […]

Continue reading …

தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை – தமிழக அரசு உத்தரவு !

Comments Off on தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை – தமிழக அரசு உத்தரவு !
தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை – தமிழக அரசு உத்தரவு !

சென்னை, ஜூன் 4 மாண்புமிகு அம்மாவின் அரசு, தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையில், கொரோனா தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்து பன்முக நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை பொதுவாக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டுள்ளார். முதல்வர் ஆணைக்கிணங்க, கொரோனா சிகிச்சைக்கு தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் […]

Continue reading …

இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே மனிதகுலத்தை காப்பாற்ற முடியும் – அன்புமணி இராமதாஸ்!

Comments Off on இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே மனிதகுலத்தை காப்பாற்ற முடியும் – அன்புமணி இராமதாஸ்!

சென்னை, ஜூன் 4 உலக சுற்றுச்சூழல் நாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், இயற்கை மீது கடந்த காலங்களில் நாம் நடத்தியத் தாக்குதல்கள் இப்போது நம்மை எவ்வாறு திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளன என்பதை அண்மைக்காலமாக நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தெளிவாக உணர்த்துகின்றன. இனியாவது இயற்கையை நாம் மதிக்காவிட்டால் மனிதகுலத்தை காப்பாற்ற முடியாது என்பதை உணர வேண்டும். உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972 ஆம் ஆண்டு சுவீடனின் ஸ்டாக்கோம் நகரில்  கூட்டப்பட்டதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் […]

Continue reading …

ஜூன் 30 வரை மாற்றுத்திறனாளிகள் வேலைக்கு வர வேண்டாம்: தமிழக அரசு!

Comments Off on ஜூன் 30 வரை மாற்றுத்திறனாளிகள் வேலைக்கு வர வேண்டாம்: தமிழக அரசு!
ஜூன் 30 வரை மாற்றுத்திறனாளிகள் வேலைக்கு வர வேண்டாம்: தமிழக அரசு!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் ஜூன் 30ம் தேதி வரை வேலைக்கு வர வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அலுவலர்கள் 50% பணிக்கு செல்ல திரும்பி உள்ளனர். இந்த நிலையில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு செல்வது சிரமம் இருப்பதை கருத்தில் கொண்டு இம்மாதம் 30ஆம் […]

Continue reading …

‘நிசர்கா’ தீவிரப் புயல் : வடக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கரையோரங்களுக்கு புயல் எச்சரிக்கை!

Comments Off on ‘நிசர்கா’ தீவிரப் புயல் : வடக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கரையோரங்களுக்கு புயல் எச்சரிக்கை!
‘நிசர்கா’ தீவிரப் புயல் : வடக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கரையோரங்களுக்கு புயல் எச்சரிக்கை!

தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்/ மண்டல சிறப்பு வானிலை மையம்/ இந்திய வானிலைத் துறையின் புயல் எச்சரிக்கைப் பிரிவு ஆகியன பின்வரும் தகவல்களை அளித்துள்ளன: கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலவும் “நிசர்கா” புயல், கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது. ஜூன் 3, 2020, இன்று காலை இந்திய நேரப்படி, 08-30 மணி நிலவரப்படி, கிழக்கு மத்திய அரபிக்கடலில் 17.6°N அட்சரேகை மற்றும் 72.3°E தீர்க்கரேகை அருகே, அலிபாக்கிலிருந்து  ( மகாராஷ்டிரா) தெற்கு […]

Continue reading …

சசி குமார் படத்தில் நடிக்க தயங்கும் விஜய்!

Comments Off on சசி குமார் படத்தில் நடிக்க தயங்கும் விஜய்!
சசி குமார் படத்தில் நடிக்க தயங்கும் விஜய்!

தளபதி 65 படத்தை முருகதாஸ், தளபதி 66 படம் மகிழ்திருமேனி அல்லது பாண்டிராஜ், தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜ் என வரிசைகட்டி நிற்கின்றன. இதற்கிடையில் தளபதி விஜய்யிடம் பிரபல நடிகர் ஒருவர் கதை கூறியதாகவும், அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தாலும் அந்த படத்தில் நடிக்க சிறிது தயக்கத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவரது இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல […]

Continue reading …