Home » Entries posted by admin (Page 9)
Entries posted by admin

கண்தானம் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும் – குடியரசு துணைத்தலைவர்!

Comments Off on கண்தானம் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும் – குடியரசு துணைத்தலைவர்!

கண்தானம் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும் என்றும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும், மாநிலங்களின் பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் மற்றும் ஆளுமைகளை ஈடுபடுத்தி, உள்ளூர் மொழிகளில், பரவலான மல்டிமீடியா பிரச்சாரங்கள் தொடங்கப்பட வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். 36-வது தேசிய கண் தான இருவார விழா கொண்டாட்டங்களில் உரையாற்றிய அவர், நன்கொடையாளர் திசுக்களின் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே உள்ள பெரும் இடைவெளி பற்றிக் குறிப்பிட்டார்.  […]

Continue reading …

13 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு !

Comments Off on 13 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு !

2021 ஆண்டின் 13 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. அந்த வகையில், செப்டம்பர் 9, 2021 அன்று நடைபெறும் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் வழியாக தலைமையேற்று நடத்துகிறார். இந்த மாநாட்டில் பிரேசில் அதிபர் திரு ஜெயிர் போல்சொனாரோ, ரஷிய அதிபர் மேதகு விளாடிமிர் புதின், சீன அதிபர் மேதகு ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் மேதகு சிரில் ரமாபோசா ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், திரு. அஜித் தோவல், புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் திரு. மார்கோஸ் ட்ராய்ஜோ, பிரிக்ஸ் வணிக கவுன்சிலின் சார்பு தலைவர் திரு. ஓங்கார் […]

Continue reading …

ரோஷ் ஹஷனாவுக்கு உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கு பிரதமர் வாழ்த்து!

Comments Off on ரோஷ் ஹஷனாவுக்கு உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கு பிரதமர் வாழ்த்து!

ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் மற்றும் இஸ்ரேலின் தோழமையான மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.   பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியதாவது: “இன்று ரோஷ் ஹஷனாவைக் கொண்டாடும் இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னடுக்கும் இஸ்ரேலின் தோழமையான மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.“

Continue reading …

விநாயகர் சிலைகளை இயற்கை மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும் – சத்குரு வேண்டுகோள்!

Comments Off on விநாயகர் சிலைகளை இயற்கை மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும் – சத்குரு வேண்டுகோள்!

விநாயகர் சதுர்த்திக்கு பயன்படுத்தும் விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை மூலப் பொருள்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: விநாயகர் இந்தியாவில் இருக்கும் கடவுள்களில் மிகவும் அழகானவர். அவருடைய அன்பான தன்மையாலும் குணத்தாலும் அவர் உலகம் முழுவதும் வணங்கப்படுகிறார். இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி ஒரு முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த பண்டிகையின் […]

Continue reading …

பணியில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் – டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அஞ்சலி !

Comments Off on பணியில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் – டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அஞ்சலி !

சென்னை தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு பணியின் போது இறந்த உதவி ஆய்வாளர் உடலுக்கு புளியந்தோப்பு குடியிருப்பில் டி.ஜி.பி. முனைவர் சைலேந்திர பாபு, இ.கா.ப., மலர் அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.     உயிரிழந்த எஸ்.ஐ. கோபிநாத் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதி வழங்கியிருந்தார்.

Continue reading …

கேஷவ் தேசிராஜு மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !

Comments Off on கேஷவ் தேசிராஜு மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !

ஒன்றிய நல்வாழ்வுத்துறைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும் முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பெயரனுமான கேஷவ் தேசிராஜு இன்று காலை மாரடைப்பால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அரசுப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய அவர் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோர் நலனில் தனித்த அக்கறை கொண்டிருந்த மனிதநேயப் பண்பாளராகவும் அவர் திகழ்ந்தார். தமது பாட்டனாரின் பிறந்தநாளிலேயே மறைவெய்தியுள்ள […]

Continue reading …

ஐஸ்வர்யா ராஜேஷின் 25 வது படமான  ‘பூமிகா’  !

Comments Off on ஐஸ்வர்யா ராஜேஷின் 25 வது படமான  ‘பூமிகா’  !

ஐஸ்வர்யா ராஜேஷின் 25 வது படமான  ‘பூமிகா’  திரைப்படம் ஆகஸ்ட் 23.08.2021 அன்று நெற்ஃபிளிக்சு (Netflix) மற்றும் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தை ரதீந்திரன் ஆர் பிரசாத் எழுதி இயக்கியுள்ளார். இந்தப்  படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இத்தாலிய ஒளிப்பதிவாளர் ராபர்டோ ஜஸாரா ஒளிப்பதிவு, பிருத்வி சந்திரசேகரின் இசை மற்றும் ஆனந்த் ஜெரால்டின் எடிட்டிங் ஆகியவை அடங்கும் மற்றும் இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   சித்தார்த், […]

Continue reading …

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துணைவியார் மறைவு – சீமான் ஆறுதல்!

Comments Off on முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துணைவியார் மறைவு – சீமான் ஆறுதல்!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களது துணைவியார் மறைவு – சீமான் நேரில் சென்று ஆறுதல்  முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையில் உள்ள பன்னீர்செலவம் அவர்களது இல்லத்தில் நேரில் சென்று ஆறுதலைத் தெரிவித்தார். இதுகுறித்து சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள துயர் பகிர்வு செய்தியில் கூறியிருப்பதாவது, முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், […]

Continue reading …

சாமானியர்களை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் – வேல்முருகன்!

Comments Off on சாமானியர்களை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் – வேல்முருகன்!

சாமானியர்களை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது. கொரோனா காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இச்சூழலில், எரிவாயு விலையை மேலும் ரூ.25 உயர்த்தி,  ரூ. 902.50 ஆக நிர்ணயம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒன்றிய அரசின் இத்தகையை நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது. ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும், திறமையற்ற நிர்வாகத்தாலும் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போததக்குறைக்கு […]

Continue reading …

பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இல்லத் திருமண விழா!

Comments Off on பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இல்லத் திருமண விழா!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், திருமதி சரஸ்வதி அம்மையார் ஆகியோரின் பெயர்த்தியும், முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், சௌமியா அன்புமணி ஆகியோரின் மகளுமான சங்கமித்ரா சௌமியா அன்புமணி – சென்னை சோழிங்கநல்லூர் பூ. தனசேகரன், கலைவாணி தனசேகரன் ஆகியோரின் மகன் த. ஷங்கர் பாலாஜி இணையரின் திருமணத்தை மருத்துவர் இராமதாஸ் சென்னையில் இன்று நடத்தி வைத்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் மு. கிருஷ்ணசாமி, பாமக […]

Continue reading …