Home » Entries posted by Shankar U (Page 569)
Entries posted by Shankar

இந்தியாவில் 26,727 பேருக்கு கொரோனா தொற்று

Comments Off on இந்தியாவில் 26,727 பேருக்கு கொரோனா தொற்று

புதுடெல்லி, அக் 1: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 26,727 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 26,727 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 3,37,66,707 ஆக உயர்ந்துள்ளது. 28,246 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவில் […]

Continue reading …

குடியரசு தலைவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

Comments Off on குடியரசு தலைவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

புதுடில்லி, அக் 1: குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார். இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த 1945ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி, உத்தர பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். வழக்கறிஞரான இவர், 1991ம் ஆண்டு, பாஜக கட்சியில் இணைந்தார். பின், 1994ம் ஆண்டு முதல், 2004ம் ஆண்டு வரை, ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்து வந்தார். பின், […]

Continue reading …

சென்னையில் 97 பேருக்கு டெங்கு காய்ச்சல்

Comments Off on சென்னையில் 97 பேருக்கு டெங்கு காய்ச்சல்

சென்னை, அக் 1: சென்னையில் கடந்த 15 நாட்களில் 97 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக மண்டல நல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மண்டல பூச்சியியல் வல்லுனர்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதையடுத்து நிருபர்களிடம் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறிகையில், “சென்னையில் கடந்த […]

Continue reading …

ஐபிஎல் தொடர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அமோக வெற்றி

Comments Off on ஐபிஎல் தொடர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அமோக வெற்றி

துபாய், அக் 1: ஐபிஎல் போட்டியில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 44வது போட்டி நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து, சென்னை […]

Continue reading …

தருமபுரியில் தாய் சேய் அவசர சிகிச்சை மையம்: முதலமைச்சர் திறந்துவைப்பு

Comments Off on தருமபுரியில் தாய் சேய் அவசர சிகிச்சை மையம்: முதலமைச்சர் திறந்துவைப்பு

தர்மபுரி, செப் 30: தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தாய்சேய் அவசர சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டத்திற்கு சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு, அரசு திட்டங்களுக்கான ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய கட்டிடம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று […]

Continue reading …

தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Comments Off on தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, செப் 30: தமிழகத்தில், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வரும் நிலையில், 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் […]

Continue reading …

மம்தாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இடைத்தேர்தல்!

Comments Off on மம்தாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இடைத்தேர்தல்!

கொல்கத்தா, செப் 30: மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். பின் முதலமைச்சராக பதவி ஏற்ற மம்தா பானர்ஜிக்கு, 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்வாக வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் […]

Continue reading …

இந்தியாவில் புதிதாக 23,529 பேருக்கு கொரோனா தொற்று

Comments Off on இந்தியாவில் புதிதாக 23,529 பேருக்கு கொரோனா தொற்று

புதுடெல்லி, செப் 28: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 23,529 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 23,529 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 3,37,39,980 ஆக உயர்ந்துள்ளது. 28,718 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவில் […]

Continue reading …

ஜப்பான் பிரதமராக அக் 4ம் தேதி புமியோ கிஷிடா பதவியேற்பு

Comments Off on ஜப்பான் பிரதமராக அக் 4ம் தேதி புமியோ கிஷிடா பதவியேற்பு

டோக்கியோ, செப் 30: ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக, புமியோ கிஷிடா, வரும் அக்டோபர் 4ம் தேதி பதவி ஏற்க உள்ளார். ஜப்பான் நாட்டின் பிரதமராக சுகா பதவி வகித்து வந்தார். மக்கள் மத்தியில், கொரோனா வைரசை கையாண்ட விதத்தில் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. இதன் விளைவாக, அவரது அமைச்சரவையின் செல்வாக்கு மதிப்பீடு 30 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது. இதைத்தொடர்ந்து ஒரு ஆண்டு பொறுப்புக்கு பிறகு அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஜப்பானில் […]

Continue reading …

நில மோசடி வழக்கு: நேரில் ஆஜராக வடிவேலுவுக்கு உத்தரவு

Comments Off on நில மோசடி வழக்கு: நேரில் ஆஜராக வடிவேலுவுக்கு உத்தரவு

சென்னை, செப் 30: நில மோசடி வழக்கு விசாரணைக்கு, டிசம்பர் 7ம் தேதி நேரில் ஆஜராகக்கோரி, நடிகர் வடிவேலுவுக்கு, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில மோசடி தொடர்பாக, நடிகர் சிங்கமுத்து உள்ளிட்டோர் மீது நடிகர் வடிவேலு கொடுத்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சமீபத்தில், இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில், நடிகர் வடிவேலு வருமான வரி […]

Continue reading …