
தனக்கும் தனது கணவர் மாதவன் உயிருக்கும் 2 பேரால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் சகோதரர் மகள் ஜெ.தீபா குற்றம்சாட்டியுள்ளார். தீபா வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 2 பேர் தங்களை பின் தொடர்ந்து வருவதாகவும், பெண் என்று கூட பாராமல் இரவு பகலாக தொலைபேசி மூலம் தொந்தரவு அளித்து வருவதாகவும், சில ரவுடிகளுடன் வீட்டுக்குள் நுழைய முயற்சிப்பதாகவும் தீபா கூறியுள்ளார். தனக்கு கால்கள் நடக்க முடியாத சூழ்நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருவதால், […]
Continue reading …
மனுஸ்மிருதி பற்றி விசிக தலைவர் திருமாவளவன் பேசிய விவகாரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அரசியல் பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த கூடாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதாக சிதம்பரம் தொகுதி எம்.பி யான விசிக தலைவர் திருமாவளவனை தகுதி நீக்கம் செய்ய கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. 2,200 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனுஸ்மிருதி குறித்து விளக்கம் கொடுக்க திருமாவளவன் ஒன்றும் சமஸ்கிருதத்தில் பண்டிதர் அல்ல என்று […]
Continue reading …
துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஈகே-0542 மூலம் சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது முர்சின் இப்ராகிம், 42, பரக்கத் அலி சதுருதீன், 45, ஆகிய பயணிகள் சந்தேகத்தின் அடிப்படையில் விமானநிலையத்தில் இருந்து வெளியேறும் வாயிலில் இடைமறிக்கப்பட்டனர். அவர்களை விசாரித்த போது தங்கப் பசையை மறைத்து வைத்து எடுத்து வந்ததை ஒப்புக் கொண்டனர். அவர்களை சோதனையிட்டபோது 166 கிராம் எடையுடைய இரண்டு பொட்டலங்களில் இருந்து 146 கிராம் எடையுடைய தங்கம் கண்டறியப்பட்டது. மேலும் 66 கிராம் எடையிலான இரண்டு தங்கத் துண்டுகளும், 30 கிராம் எடையிலான ஒரு தங்கச் சங்கிலியும் கண்டறியப்பட்டன. […]
Continue reading …
இஸ்ரோ சாதித்துவிட்டீர்கள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் !! பிஎஸ்எல்வி-சி49/ஈஓஎஸ்-01 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் இந்திய விண்வெளித் தொழில் துறைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “பிஎஸ்எல்வி-சி49/ஈஓஎஸ்-01 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ மற்றும் இந்திய விண்வெளித் தொழில் துறையை நான் வாழ்த்துகிறேன். கொவிட்-19 காலகட்டத்தில், குறித்த காலத்துக்குள் இதை செய்து முடிப்பதற்காக பல்வேறு சவால்களை நமது விஞ்ஞானிகள் எதிர்கொண்டார்கள். அமெரிக்கா மற்றும் லக்சம்பர்கில் இருந்து தலா நான்கு மற்றும் லித்துவேனியாவிலிருந்து ஒன்று […]
Continue reading …
தமிழக பாஜக தொடங்கிய வேல் யாத்திரை மற்றும் அதன் பின்னணியில் உள்ள இருவர் குறித்து அரசியல் விமர்சனங்கள், கருத்துக்களை தெரிவித்துவரும் விஜயகுமார் அருணகிரி கருத்து தெரிவித்துள்ளார் அது பின்வருமாறு :- தமிழக பாஜக வேல் யாத்திரையை துவக்கும் முன், தமிழக பாஜக தலைவர் முருகன், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியைசந்தித்து ஆலோசனை நடத்தினார் . கிஷன் ரெட்டி தெலுங்கானாவில் உள்ள பாஜகவில் மிகச்சிறந்த தலைவராக உருவெடுத்து வருகிறார். அடுத்து தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் […]
Continue reading …
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக, நேற்று செய்திகள் வெளியான நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகே, விஜயின் தந்தை எஸ்.ஏ.சி-யின் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த அறிவிப்பிற்கு, நடிகர் விஜயும், அறிக்கை வெளியிட்டு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று விஜயின் தாயாரும், பாடகியுமான ஷோபா சந்திரசேகர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில், அரசியல் பேச வேண்டாம் என்று பலமுறை கூறியும், எஸ்.ஏ.சி கேட்காததால், அவரிடம் விஜய் பேசுவதில்லை என்று தெரிவித்தார்.அசோசியேஷன் தொடங்குவதாகவே, என்னிடம் […]
Continue reading …
2021-ம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்துக்கு விண்ணப்பம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பயணத்தில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் உள்ள ஹஜ் இல்லத்தில் திரு நக்வி வெளியிட்ட அறிவிப்பில், 2021-ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்தின்போது, கொரோனா பெருந்தொற்றுக்கான தேச-சர்வதேச வழிகாட்டும் நடைமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று கூறினார். 2021-ஆம் ஆண்டு ஹஜ் பயணத்துக்கு ஆன்லைன் வழியாகவும், தபால் […]
Continue reading …
ஐபிஎல் கிரிக்கெட் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தோற்கடித்தது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து பெங்களூரு அணி வெளியேற்றப்பட்டது. ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பை வெல்லாத அணியாக இருக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கோப்பை வெல்லும் கனவு இந்த முறையும் கனவாகவே போய்விட்டது. தோல்விக்குப் பிறகு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி […]
Continue reading …
திருப்பூர் மாவட்டத்தில்,ரூபாய் 31 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 287 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு, அடிக்கலும் நாட்டினார். இதையடுத்து கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். இதை தொடர்ந்து, விவசாயிகளுடனும் , தொழில்துறை பிரதிநிதிகளுடனும் முதலமைச்சர் கலந்துரையாடினார். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அரசின் நல்ல நடவடிக்கைகளால், வெளிமாநில தொழிலாளர்கள் […]
Continue reading …
இந்த முறை பா.ஜ.க.வுக்கு வாக்களித்து பாருங்கள், 5 ஆண்டுகளுக்குள் மேற்குவங்க மாநிலத்தை ஜொலிக்க வைப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த பத்தாண்டுகளாக மம்தா பானர்ஜியின் ஆட்சியில் மக்களின் நம்பிக்கைகள் பொய்த்து விட்டதாக கடுமையாக குற்றம் சாட்டினார். கடந்த ஓராண்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் அரசியல் வன்முறை காரணமாக கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டிய அமித்ஷா,அதற்கு இதுவரை மம்தா அரசு என்ன நடவடிக்கை எடுத்தது […]
Continue reading …