Home » Entries posted by Shankar U (Page 611)
Entries posted by Shankar

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,791 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,791 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,791 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 80 பேர் பலியாகியுள்ளனர், 5,706 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,80,808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,313 பேர் பலியாகியுள்ளனர், 5,25,154 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,63,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

திருச்சியில் ஈ.வெ.ரா சிலை அவமதிப்பு: இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது – தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கண்டனம்!

Comments Off on திருச்சியில் ஈ.வெ.ரா சிலை அவமதிப்பு: இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது – தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கண்டனம்!

அவருடைய அறிக்கையில்; திருச்சியில் ஈவெரா அவர்களின் சிலை மீது செருப்பு மாலையிட்டு அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அநாகரீக செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை காவல்துறையினர் விரைவில் கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும் காவி புனிதமானது. அனைவரையும் அரவணைக்கும் தியாகப் பண்பின் குணமே காவி அதை தவறான சிந்தனையை பயன்படுத்துவது பண்பல்ல. ஆனால், அதே நேரத்தில் தி.மு.க வின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள், ஈ.வெ.ராவின் பிறந்த நாளன்று நான் கூறியதை மேற்கோள் காட்டி, இது […]

Continue reading …

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் உயிரழப்பு – தலைவர்கள் இரங்கல்!

Comments Off on முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் உயிரழப்பு – தலைவர்கள் இரங்கல்!

பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங் காலமானார். இவருடைய மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து உள்ளனர். 1938ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் பிறந்தவர் ஜஸ்வந்த் சிங். இவர் இந்தியா ராணுவத்தில் அதிகாரியாக வேலை பார்த்தவர். பின்பு பாஜக துவங்கிய காலத்தில் முதல் வாஜ்பாய் […]

Continue reading …

ஸ்டாலினையுடன் ஆலோசனை நடத்திய தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Comments Off on ஸ்டாலினையுடன் ஆலோசனை நடத்திய தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி ஆர் பாலு, கே என் நேரு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஆகியோர் உடன் இருந்தனர். தற்போது தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா வைரஸ் அவரைச் இருப்பது உறுதியாகியுள்ளது. இதைப்பற்றி […]

Continue reading …

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல்வரின் உடல் நிலையில் முன்னேற்றம்!

Comments Off on கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல்வரின் உடல் நிலையில் முன்னேற்றம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளது என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா, கடந்த 14ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பின் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், அவருக்கு காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சனை இருந்ததால் லோக்நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனையில் கடந்த 21ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்பு அந்த மருத்துவமனையில் இருந்து மேக்ஸ் மருத்துவமனைக்கு நேற்று முன் […]

Continue reading …

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆறு மணி நேரம் தீவிர விசாரணை!

Comments Off on பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆறு மணி நேரம் தீவிர விசாரணை!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்ந்து, பாலிவுட் திரையுலகில் போதைப்பொருள் பிரச்சனை பெருமளவில் கிளம்பியுள்ளது. போதைப்பொருள் உபயோகப்படுத்தியது மற்றும் அவருடைய காதலர் சுஷாந்த்துக்காக பெற்றது என்ற குற்றங்களின் பேரில் நடிகை ரியா சக்கரவர்த்தி கடந்த 8ம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதில் அவருடைய ததம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் உள்ளிட்ட பலரும் கைதாகினர். இதை அடுத்து சில திரைத்துறையினரிடம் போதைப் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,647 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,647 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,647 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 85 பேர் பலியாகியுள்ளனர், 5,612 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,75,017 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,233 பேர் பலியாகியுள்ளனர், 5,19,448 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,62,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது; பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு நயன்தாரா ஆழ்ந்த இரங்கல்!

Comments Off on நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது; பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு நயன்தாரா ஆழ்ந்த இரங்கல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள்,என பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடலை இன்று திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் இருக்கும் அவருடைய பண்ணை இல்லத்தில் இறுதி சடங்குகள் செய்ப்பட்டு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது நடிகை நயன்தாரா பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதனை பற்றி அவருடைய பதிவில்; […]

Continue reading …

மீண்டும் உங்களை இந்த மண்ணில் வரவேற்க காத்திருக்கிறேன் பாடும் நிலாவே; பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு சிம்புவின் உருக்கமான பதிவு!

Comments Off on மீண்டும் உங்களை இந்த மண்ணில் வரவேற்க காத்திருக்கிறேன் பாடும் நிலாவே; பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு சிம்புவின் உருக்கமான பதிவு!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், போன்றோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர் சிம்பு பாடகர் எஸ் பி சுப்ரமணியம் உடன் நடந்த சில நிகழ்வுகளை உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்; எத்தனை ஆயிரம் பாடல்கள் பாடிக்கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்? சிட்டாய் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் […]

Continue reading …

அவர் மறைந்தாலும் அவர் குரல் நம்முடன் வாழும் – பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மத்திய அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் இரங்கல்!

Comments Off on அவர் மறைந்தாலும் அவர் குரல் நம்முடன் வாழும் – பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மத்திய அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் இரங்கல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், போன்றோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் பாடகர் எஸ் பி சுப்ரமணியத்தின் மறைவிற்கு அவருடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதை பற்றி அவரின் டுவிட்டர் பதிவில்; பாடும் நிலா.. பத்மபூஷண் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் பாடல்கள் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பலருக்கு மகிழ்ச்சியளித்தன. […]

Continue reading …