Home » Entries posted by Shankar U (Page 625)
Entries posted by Shankar

#BREAKING: CSK அணியில் 13 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: CSK அணியில் 13 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஐபில் போட்டியில் விளையாட சென்ற சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள 12 ஊழியர்கள் மற்றும் ஒரு வீரர் உள்பட 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து சென்னை அணியை சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Continue reading …

ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே பதவியை ராஜினாமா செய்தார் என தகவல்!

Comments Off on ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே பதவியை ராஜினாமா செய்தார் என தகவல்!

உடல்நிலை காரணத்தினால் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே அவருடைய பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2006 ஆம் ஆண்டு முதல் முதலில் பிரதமராக பதவி ஏற்றார். அதன் பின்பு 2007 ஆம் ஆண்டு உடல்நிலை காரணத்தினால் ராஜினாமா செய்தார். இதனை அடுத்து 2012 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்று எட்டு வருடங்கள் பிரதமர் ஆக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஷின்ஷோ அபே இரண்டுமுறை மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வந்ததால் அவரின் உடல் நிலை […]

Continue reading …

சுசாந்துக்கு காதலி ரியா சக்ரபோர்த்தி தான் விஷம் கொடுத்து கொலை செய்தார் – சுஷாந்தின் தந்தை குற்றம்சாட்டு!

Comments Off on சுசாந்துக்கு காதலி ரியா சக்ரபோர்த்தி தான் விஷம் கொடுத்து கொலை செய்தார் – சுஷாந்தின் தந்தை குற்றம்சாட்டு!

பாலிவுட் சுஷாந்த் சிங் ராஜ்புதை அவரின் காதலி ரியா சக்ரபோர்த்தி தான் விஷம் கொடுத்து கொலை செய்ததாக சுஷாந்தின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இதை பற்றி அவர் வெளியிட்ட வீடியோவில், என்னுடைய மகனுக்கு ரியா சக்ரபோர்த்தி தான் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் அளித்து கொலை செய்துள்ளார் என தெரிவித்துள்ளார். இதனால் சுஷாந்தின் மரண வழக்கை விசாரணை செய்து வரும் சிபிஐ அதிகாரிகள் ரியாவையும் அவருக்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். சுஷாந்தின் மரண வழக்கை சிபிஐ […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5981 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5981 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5981 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 109 பேர் பலியாகியுள்ளனர், 5,870 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,03,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,948 பேர் பலியாகியுள்ளனர், 3,43,930 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,30,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

சீனாவின் ஏவுகணைகளை கொண்டு அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலுக்கு எச்சரிக்கை விடுப்பு!

Comments Off on சீனாவின் ஏவுகணைகளை கொண்டு அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலுக்கு எச்சரிக்கை விடுப்பு!

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடும் வகையில், தென்சீனா கடலில் விமானம் தாங்கி கப்பலை அழிக்கும் இரண்டு ஏவுகணைகளை சீனா ஏவியதாக தகவல் கூறப்படுகிறது. தென்சீனா கடலுக்கு சீனா நாடு உரிமை கொண்டாடும் விவகாரத்துக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவிப்பதால் இரண்டு நாடுகளும் இடையே பதற்றம் நிலவும் நிலை இருந்து வருகிறது. தற்போது சீனா கடற்படை பயிற்சியை மேற்கொண்டு இருந்த சமயத்தில், அமெரிக்கா நாட்டின் உளவு பார்க்கும் விமானம், பார்ப்பதற்கு தடைவிதித்த பகுதியில் அனுமதி இல்லாமல் பறந்ததாக சீனா குற்றம்சாட்டியது. […]

Continue reading …

நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்துவதற்கு ஆதரவாக 150 கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்!

Comments Off on நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்துவதற்கு ஆதரவாக 150 கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்!

பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், நீட், ஜே.இ.இ தேர்வுகளை தாமதப்படுத்துவது மாணவர்களின் எதிர்காலத்தில் சமரசம் செய்வதாகும் என 150க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் காரணத்தினால் நீட், ஜே.இ.இ தேர்வுகளை அடுத்த மாதத்தில் நடத்துவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதை குறிப்பிட்டுள்ள கல்வியாளர்கள், அரசியல் லாபத்தை அதிகமாக்கி கொள்ள பலரும் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளனர். இளைஞர்களும், மாணவர்களும் நம் நாட்டின் எதிர்காலம். இதனால் முன்பே அறிவித்தபடி நீட், ஜே.இ.இ தேர்வுகளை மத்திய […]

Continue reading …

நீதியரசர் திரு.A.R.லட்சுமணன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

Comments Off on நீதியரசர் திரு.A.R.லட்சுமணன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

நீதியரசர் திரு.A.R.லட்சுமணன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதை பற்றி அவரின் இரங்கல் செய்தியில்; உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு. ஏ.ஆர் லட்சுமணன் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர், 26.8.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன் நீதியரசர் திரு. ஏ.ஆர் லட்சுமணன் அவர்கள் தலைசிறந்த வழக்கறிஞர். இவர் தனது திறமையான வாதத்தால் பல வழக்குகளில் வெற்றி கண்ட பெருமைக்குரியவர். அவர் […]

Continue reading …

பாகிஸ்தானுக்கு உதவி செய்ய ஜெர்மனி மறுப்பு – அதிகரிக்கும் எதிர்ப்பு!

Comments Off on பாகிஸ்தானுக்கு உதவி செய்ய ஜெர்மனி மறுப்பு – அதிகரிக்கும் எதிர்ப்பு!

நீர்மூழ்கி கப்பல்களை மேம்படுத்த பாகிஸ்தான் கேட்ட தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்கு ஜெர்மனி மறுப்பு தெரிவித்துள்ளது. நீர்மூழ்கிக்கப்பல் நீர்மட்டத்தில் தெரியாத அளவு தண்ணீருக்குள் வந்தாலும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது கடல் பரப்புக்கு வர வேண்டும். ஆனால், Air Independent Propulsion என்கிற தொழில்நுட்பத்தை கொண்டு வாரக்கணக்கில் நீர்மூழ்கி கப்பல்கள் கடல் பரப்புக்கு மேல் கப்பல் வருவதை தடுக்க முடியும் . இதன் மூலம் பல வாரத்துக்கு தண்ணீருக்குள் மறைந்து தாக்கவும் மற்றும் தப்பிவிடவும் முடியும். இதனிடையே இந்த […]

Continue reading …

இந்த வருடம் பொறியியல் கல்விக்கட்டணம் அதிகரிக்கப்படாது – அமைச்சர் கே.பி.அன்பழகன்!

Comments Off on இந்த வருடம் பொறியியல் கல்விக்கட்டணம் அதிகரிக்கப்படாது – அமைச்சர் கே.பி.அன்பழகன்!

இன்று சென்னை தரமணியில் பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்-னை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். இதன் பின்பு நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது; செப்டம்பர் 10ஆம் தேதி சான்றிதழ் சரி பார்க்கும் பணிகள் முடிவடையும் எனவும் செப்டம்பர் 17ஆம் தேதி பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வருடம் கொரோனா வைரஸ் காரணத்தினால் அரசு ஒதுக்கீட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் அதிகரிக்கப்படாது என தெரிவித்தார். கட்டணம் செலுத்திவிட்டு அரியர் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களும் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,958 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,958 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 118 பேர்பலியாகியுள்ளனர், 5,606 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,97,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,839 பேர் பலியாகியுள்ளனர், 3,38,060 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,29,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

Continue reading …