Home » Entries posted by Shankar U (Page 625)
Entries posted by Shankar

#BREAKING: தமிழகத்தில் இன்று 6,993 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 6,993 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!
#BREAKING: தமிழகத்தில் இன்று 6,993 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 77 பேர் பலியாகியுள்ளனர், 5,723 பேர் குணமடைந்துள்ளார், சென்னையில் 1,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,20,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,571 பலியாகியுள்ளனர், 1,62,249 பேர் குணமடைந்துள்ளார், சென்னையில் 95,857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 5,855 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

அதிக திறன் கொண்ட கொரோனா பரிசோதனை மையங்களை காணொலியில் தொடங்கி வைத்தார் – பிரதமர் மோடி!

Comments Off on அதிக திறன் கொண்ட கொரோனா பரிசோதனை மையங்களை காணொலியில் தொடங்கி வைத்தார் – பிரதமர் மோடி!

நொய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களில் அதிக திறனை கொண்ட பரிசோதனை மையங்களை இன்று காணொலி கட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சரியான நேரத்தில் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் உலக நாடுகளை விட இந்தியாவில் கொரோனா விகிதம் குறைவு என மோடி தெரிவித்தார். கொரோனாவை எதிர்த்து நம் மக்கள் சிறப்பாக போராடி வருகின்றனர். இந்தியாவில் 11 ஆயிரம் பரிசோதனை மையங்கள் இருக்கிறது. பின்பு 1,300 ஆய்வகங்களில் தினதோறும் லட்சத்துக்கும் அதிகமாக பரிசோதனை நடத்தப்படுகிறது. […]

Continue reading …

நாளை முதல் ஓடிடியில் வெளியாகும் “அண்டாவ காணோம்”!

Comments Off on நாளை முதல் ஓடிடியில் வெளியாகும் “அண்டாவ காணோம்”!

கொரோனா வைரஸ் காரணத்தினால் மூன்று மாதத்துக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. இதனால் தயராக இருக்கும் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. ஓடிடியில் முதலாவதாக ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் வெளியாது. இதற்கு பின்பு பல படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது. தற்போது தேசிய விருது பெற்ற தங்கமீன்கள் உள்பட பல படங்களை தயாரித்தவர் ஜே.எஸ்.கே. சதீஷ் குமார். இவருடைய தயாரிப்பில் பல நாட்களாக வெளிவராமல் இருந்த படம் “அண்டாவ காணோம்”. இந்த படத்தில் […]

Continue reading …

சிஆர்பிஎஃப்-ன் 82வது அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!

Comments Off on சிஆர்பிஎஃப்-ன் 82வது அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!

இன்று மத்திய ரிசர்வ் காவல் படையின்(சிஆர்பிஎஃப்) 82வது அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்தை தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டது: அனைவருக்கும் வாழ்த்துக்கள்; இந்த சிறப்பான படையின் 82 வது அமைப்பு நாளில் பணியாளர்கள் இருக்கின்றனர். சி.ஆர்.பி.எஃப் நம் தேசத்தை பாதுகாப்பாக வைப்பதில் முன்னணியில் உள்ளது. இந்த சக்தியின் தைரியமும், நிபுணத்துவமும் பரவலாக போற்றப்படுகின்றது. சிஆர்பிஎஃப் வீரர்கள் வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் பெரிய உயரங்களை அடையட்டும் என பிரதமர்மோடி பதிவிட்டுள்ளார்.

Continue reading …

#BREAKING: கந்தசஷ்டி கவசம்: கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

Comments Off on #BREAKING: கந்தசஷ்டி கவசம்: கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கடவுள் முருகனின் கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி யூட்டிப் சேலில் வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். மேலும், நபிகள் நாயகம் பற்றி ஆபாசமாக பேசிய கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை.

Continue reading …

அயோத்தி ராமர் கோவிலுக்கு அனைத்து மதத்தினரும் நன்கொடை கொடுக்கலாம் – கோவில் அறக்கட்டளை தகவல்!

Comments Off on அயோத்தி ராமர் கோவிலுக்கு அனைத்து மதத்தினரும் நன்கொடை கொடுக்கலாம் – கோவில் அறக்கட்டளை தகவல்!

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கட்டுவதற்கு அனைத்து மதத்தினரும் நன்கொடை கொடுக்கலாம் என கோவில் அறக்கட்டளையின் உறுப்பினரும், உபியில் இருக்கும் பெஜாவர் மட தலைவரான விஸ்வநாத் தீர்த்த சுவாமி தெரிவித்துள்ளார். இதை பற்றி பேசிய அவர் கூறியது: ஒருவர் ரூபாய் 10 அல்லது ஒரு குடும்பத்தில் இருந்து ரூபாய். 100 வரை நன்கொடை வசூலிக்கப்படும். பின்னர் ஒரு ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை நன்கொடை கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் […]

Continue reading …

டெல்லி ராணுவ மருத்துவமனைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரூபாய்.20 லட்சம் நன்கொடை!

Comments Off on டெல்லி ராணுவ மருத்துவமனைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரூபாய்.20 லட்சம் நன்கொடை!

டெல்லியில் இருக்கும் ராணுவ மருத்துவமனைக்கு இந்தியா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரூபாய். 20 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளார். இன்று கார்கில் போரின் 21வது வெற்றி தினத்தை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த போரில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், டெல்லியில் இருக்கும் ராணுவ மருத்துவமனைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரூபாய் 20 லட்சம் கோடியை நன்கொடையாக கொடுத்துள்ளார். இந்த நிதியைக் கொண்டு டெல்லி மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பல சாதனங்களை வாங்குவதற்கு உதவியாக […]

Continue reading …

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்கள் நலத்திட்ட உதவி!

Comments Off on தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்கள் நலத்திட்ட உதவி!

நடிகர் தனுஷ் ( ஜூலை 28) பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்ட தலைமை தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக தூய்மை பணியாளர்கள் 150 பேருக்கு அரிசி, மளிகை, காய்கறி, கபசுரகுடிநீர் போன்றவை வழங்கப்பட்டது. இந்த விழாவில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் பணியாளர்களுக்கு நலத்திட்டம் பொருட்களை வழங்கினார். இதனை ரசிகர் மன்ற நிர்வாகிகள் காமராஜ், ஶ்ரீகுட்டி, சுந்தரபாண்டியன் விழா ஏற்பாட்டினை செய்துள்ளனர்.

Continue reading …

இந்த சிகிக்சையால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டேன் – விஷால்!

Comments Off on இந்த சிகிக்சையால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டேன் – விஷால்!

ஆயுர்வேத சிகிச்சையால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டேன் என, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷால். இவர் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் சங்கத்தின் முக்கியமான பதவியில் இருந்து வருகிறார். தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணம் அடைந்துள்ளார்‌‌. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து நடிகர் விஷாலுக்கும் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 6,986 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 6,986 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!
#BREAKING: தமிழகத்தில் இன்று 6,986 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,986பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 85 பேர் பலியாகியுள்ளனர், 5,471பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,13,723பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,494 பலியாகியுள்ளனர், 1,56,526 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 94,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்பு மற்ற மாவட்டங்களில் 5,831 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …