இன்று அயோத்தியில் இருக்கும் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி அடிக்கல்லை நாட்டினார். இன்று உலக அளவில் அயோத்தி ராமர் கோவில் மிகப் பிரபலம் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பூமி பூஜை பற்றி பல பிரபலங்கள் அவர்களுடைய சமூக வலைதளம் பக்கத்தில் பதிவிட்டு பக்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். ராமரின் உருவப்படம், ராமர் கோவில் மாதிரி புகைப்படங்கள் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை சுகன்யா அவருடைய நெற்றியில் ஸ்ரீராமபிரானின் உருவத்தை பொட்டாக இட்டு அவருடைய பக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நெற்றில் ராமரின் பொட்டு கூடிய நடிகை சுகன்யாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாகி வருகிறது.