
இனி சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளும் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற சனிக்கிழமைகளில் அரை நாள் இயங்கி வருகிறது. இந்நிலையில் வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறையளிக்க பரிசீலனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பதிலாக திங்கள் முதல் வெள்ளி வரை உள்ள வேலை நாட்களில் வேலை நேரம் அதிகரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை என்ற […]
Continue reading …
பெண்கள் இருவர் கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டுள்ள சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மந்திரவாதி ஷமி பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரள தம்பதி இருவர் பணம், செல்வம் அதிகமாக வேண்டுமென மந்திரவாதி ஒருவருடன் சேர்ந்து கொண்டு பெண்களை நரபலி கொடுத்து, நரபலி கொடுத்த மனித கறியையும் சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பபையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தேசியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குற்றவாளிகளான பகவந்த் என்னும் பகவல் சிங், அவரது மனைவி லைலா மற்றும் மந்திரவாதி முகமது […]
Continue reading …
கர்நாடக கல்வியமைச்சர் நாகேஷ் கர்நாடகாவில் ஹிஜாப்பிற்கான தடை தொடரும் என்று கூறியுள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் அணிய தடை விதித்து அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்த சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்பில் இரண்டு நீதிபதிகள் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் எதை பின்பற்றுவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் செய்தியாளர்களிடம், “கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக ஐகோர்ட்டு விதித்த தடை தொடரும். […]
Continue reading …
காணாமல் போன 12 பெண்களின் நிலை என்னவென்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கேரள தம்பதி இருவர் மந்திரவாதி ஒருவருடன் சேர்ந்து பணம், செல்வம் குவிய வேண்டுமென்று பெண்களை நரபலி கொடுத்து, அந்த மனித கறியையும் சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தேசியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளான பகவந்த் என்னும் பகவல் சிங், அவரது மனைவி லைலா மற்றும் மந்திரவாதி முகமது ஷபி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கொண்ட […]
Continue reading …
பெங்களூரில் பேருந்து கண்டக்டர்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 10 ரூபாய் நாணயத்தை தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுதும் உள்ள கிராமங்களில் வாங்க மறுப்பதாகவும், பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தியும் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்றும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பெங்களூரில் உள்ள பெரும்பாலான பேருந்து கண்டக்டர்கள் […]
Continue reading …
சமீபத்தில் எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பற்றிய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வகையில் ஒரு தம்பதியர் சென்ற வாகனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. நேற்று ஒரு தம்பதியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பிரதான சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று வாகனத்தில் தீ பற்றுவது போன்று உணர்ந்த அப்பெண் தன் கணவரிடன் கூறவே, அவரும் சுதாரித்துக் கொண்டு, வாகனத்தை சாலையில் ஓரங்கட்டி வானத்தைவிட்டு கீழிறங்கினார். அப்போது, வண்டியின் அடிப்பாகத்தில் குபுகுபுவென தீப்பற்றியது. அதைப் பார்த்து தம்பதியர் அதிர்ச்சியடைந்தனர். அருகில் […]
Continue reading …
உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியை தொடங்கியவருமான, முலாயம்சிங் யாதவ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். முலாயம்சிங் யாதவ் உத்தர பிரதேசத்தில் மிகப்பெரும் அரசியல் கட்சியான சமாஜ்வாடி கட்சியை தொடங்கியவர். உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான முலாயம் சிங் யாதவ், லோக் சபா எம்.பியாகவும் பதவி வகித்து வந்தார். கடந்த ஆகஸ்டு 22ம் தேதி அன்று முலாயம் சிங் யாதவ்விற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் டில்லி குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை […]
Continue reading …
ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் 2 பேர் பரிதாபமா பலியாகினர். மேலும் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஒரிசா மாநிலத்தில் உள்ளூர் அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் பார்க்க வந்தனர். அப்போது திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மின்னல் தாக்கியது. இந்த மின்னல் காரணமாக கால்பந்தாட்ட வீரர்கள் இருவர் பலியானதாகவும் 21 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படுகாயம் […]
Continue reading …
தீபாவளியன்று புதுடில்லியில் பட்டாசு வெடிக்க அரசு தடைவிதித்துள்ளது. இத்தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தலைநகர் டில்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. மனிதர்கள் வாழ முடியாத இடமாக டில்லி மாறி வருகிறது. இதனால் காற்றின் தரத்தை மேம்படுத்த வாகன போக்குவரத்தை குறைத்தல் உட்பட்ட பல நடவடிக்கைகளை டில்லி அரசு மேற்கொண்டு வருகிறது. தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டில்லி சுற்றுசூழல் துறை அமைச்சர் கோபால்ராய், “டில்லியில் இந்த முறை […]
Continue reading …
இது புரட்டாசி மாதம் என்பதாலும், குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளதால் தரிசன ஏற்பாடுகளை தேவஸ்தானம் விரைவுபடுத்தி உள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் தரிசனத்திற்காக திருப்பதிக்கு அதிகளவில் வருகை தருகின்றனர். தற்போது புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். கடந்த 12 மணி நேரமாக தரிசனத்திற்கு மக்கள் அனுமதிக்கப்படாததால் சுமார் 8 கி.மீ நீளத்திற்கு பக்தர்கள் கூட்டம் தரிசனத்திற்காக காத்துள்ளனர். லட்சக்கணக்கான […]
Continue reading …