மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டில் 62 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட் மூடப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிலும் பரவியது. கொரோனாவால் அங்கு 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதால் மே 5 ஆம் தேதி மூடப்பட்டது .
இதன் பின்பு மூன்று மாதத்துக்கு மேல் மூடப்பட்டு இருந்து மார்க்கெட் செப் 28 ஆம் தேதி திறக்கப்பட்டது . பொருட்கள் வாங்க வரும் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்படுகிறது.
கடந்த 16 நாட்களில் மட்டும் 4200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 62 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related posts:
மேக்கேதாட்டு அணையைத் தடுக்க விரைந்து செயல்படு - பெ. மணியரசன்!
களரிப் போட்டிகளில் 8 பதக்கங்கள் - தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த ஈஷா மாணவர்கள்!
கிடுகிடு! ஓராண்டை கடந்தும் மிரட்டும் கொரோனா.. 2ம் அலைக்கு வாய்ப்பு அதிகம் சென்னைக்கு கடும் எச்சரிக்க...
திண்டிவனம் ராமமூர்த்தி மறைவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் !