கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் சவூதி அரேபியா விலையை குறைத்துள்ளது. கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் சீனாவும் விலையை குறைத்துள்ளது. இந்த காரணத்தினால் சர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது.
நுகர்வு நாடுகளின் தேவை குறைந்ததால், உலக அளவில் எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடு தான் சவூதி அரேபியா. தற்போது, ஆசியாவுக்கு விநியோகிக்கும் கச்சா எண்ணெயின் விலையை குறைத்துள்ளது. இதை போன்று உலக அளவில் எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடு தான் சீனா. சீனாவின் உறுதியற்ற நிலையில் உள்ளதால், மந்தமாக இறக்குமதியை செய்கிறது.
தற்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 1.4 சதவீதம் முதல் 1.6 சதவீதம் அளவு குறைந்துள்ளது. பேரலுக்கு 41.51 டாலர்கள் முதல் 42 டாலர்கள் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.