சீனாவிலிருந்து பெரியபுராணம் சொற்பொழிவு உலகையே அச்சுறுத்தி வருகிறது இந்த வைரசால் அமெரிக்கா இந்தியா பிரேசில் ஆகிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் இதுவரை 75 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மத்தியில் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகரான ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், டிரம்பும் மற்றும் மெலனியா டிரம்பும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டனர். அதில் இருவருக்கும் கொரோனா உறுதியானது. இதையடுத்து, அமெரிக்க ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டார்.
இதன் பின்பு அதிபர் டிரம்பின் உடல்நிலை பற்றி மருத்துவர்கள் கூறியது; அதிபர் நல்ல முறையில் சிகிச்சை அளிப்பதற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார். அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியம் என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது கொரோனா சிகிக்சை உள்ள அதிபர் டிரம்ப் எனது உடல்நிலை நன்றாக இருப்பதாக உணர்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.