மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனா தொற்று உறுதி!

Filed under: இந்தியா |

மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த செய்தியை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவருடைய ட்விட்டர் பதிவில்; நான் இன்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதில் எனக்கு கொரோனா இருப்பது உறுதியாகியது. நான் நன்றாக இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனையை எடுத்து கொண்டேன்.

கடந்த சில நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அனைவரும் அவர்களின் உடல்நிலையை கண்காணிக்கவும், அதில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என தெரிய்வத்துள்ளார்.