
இதுவரையிலும் இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்குமிடையே அமெரிக்க டாலரில் வர்த்தகம் நடந்து வந்தது. தற்போது ரூபாயில் வர்த்தகம் நடைபெற உள்ளது என வங்கதேச ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார். இந்தியா வங்காளதேசம் இடையே அமெரிக்க டாலர் வர்த்தகத்தை குறைக்கும் அடிப்படையில் ரூபாய் வர்த்தகத்தை தொடங்கி உள்ளதாக வங்கதேச கவர்னர் அப்துல் ரவுப் தலுக்தர் கூறியுள்ளார். இது குறித்து அவர், “இரு நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய பயணத்தின் முதல் அடியாக ரூபாய் வர்த்தகம் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. […]
Continue reading …
நேற்றிரவு சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 8 விமானங்கள் வானில் சில நிமிடம் வட்டமடித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்றிரவு சென்னையில் திடீரென இடி மின்னல் மற்றும் சூரைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் விமான நிலையத்தில் விமான சேவைகள் பெரும் பாதிப்படைந்தன. லண்டன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட உள்நாட்டிலிருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் சில நிமிடங்கள் வானில் வட்டமடித்து அதன் பின்னர் […]
Continue reading …
இன்று தொடங்கப்பட்டு சில நிமிடங்களிலேயே தீபாவளிக்காக ரயிலில் செல்வதற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது. இவ்வாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் ரயில்களுக்கான முன்பதிவை சில மாதங்கள் முன்னதாகவே ரயில்வே துறை தொடங்கி விடுகிறது. அவ்வாறாக நவம்பர் 9ம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. முன்பதிவு செய்வதற்காக […]
Continue reading …
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி டில்லி சென்றார். அவர் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி பயணத்தின் போது அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை சந்தித்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி நீக்கம் குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்பட்டது. டில்லி பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பி […]
Continue reading …
நாளை உலகமெங்கும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ரிலீசாகிறது. தமிழில் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்கில் இத்திரைப்படம் “மாவீர்டு” என்ற பெயரில் டப்பாகி ரிலீசாகிறது. படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இத்திரைப்படத்துக்காக சிவகார்த்திகேயன் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இப்போது துபாய்க்கு படக்குழு சென்றுள்ளது. முன்னதாக படக்குழுவினர் ஐதராபாத் மற்றும் மலேசியா ஆகிய இடங்களில் புரமோஷனுக்காக சென்றனர். “மாவீரன்” திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், சரிதா, அதிதி மற்றும் மிஷ்கின் […]
Continue reading …
“விக்ரம்” திரைப்படம் நடிகர் கமல்ஹாசன் அரசியல் எண்ட்ரிக்கு பிறகு அவர் நடித்த திரைப்படம். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், அவரின் சம்பளம் பல மடங்கு உயர்ந்ததோடு மட்டுமல்லாமல் தற்போது ஒன்றுக்கும் மேல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். “இந்தியன் 2” ஷூட்டிங்கை விரைவில் முடிக்கவுள்ள கமல் அடுத்து “பிராஜக்ட் கே” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். கடந்த வாரம் கமல் நடிப்பில் வினோத் இயக்கும் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது. முதலில் இத்திரைப்படத்துக்காக ஹெச் வினோத் விவசாயிகள் சம்மந்தப்பட்ட கதையை சொல்லி […]
Continue reading …
2006ம் ஆண்டு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான “வேட்டையாடு விளையாடு” திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்படம் டிஜிட்டலில் உருவாக்கம் செய்யப்பட்டு நேற்று கிட்டத்தட்ட 70 திரைகளில் ரிலீசானது. நேற்று புதுப்படங்கள் 7 ரிலீசான நிலையிலும் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் திரைப்படத்தின் சக்ஸஸ் மீட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் “விரைவில் “வேட்டையாடு விளையாடு 2” திரைப்படத்துக்கான வேலைகள் தொடங்கும். கமல் […]
Continue reading …
இந்தியா மட்டுமின்றி உலகளவில் பேசப்படும் ஒரு விவாதமாக மாறி உள்ளது மணிப்பூரில் சில மாதங்களாக நடந்துவரும் கலவரம். ஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து தீர்மானம் நிறைவேற்ற இடதுசாரி மற்றும் கிறிஸ்தவ குழுக்களின் உறுப்பினர்களைக் கொண்ட ஆறு நாடாளுமன்ற குழுக்கள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள மணிப்பூரின் நிலைமை என்ற பெயரில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள நிலையில் இத்தீர்மான கோரிக்கை […]
Continue reading …
உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் ஏஒன் என்ற செயற்கை தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. குறிப்பாக ChatGPT என்ற தொழில்நுட்பம் முன்னணி நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. கூகுள் உள்பட பல நிறுவனங்கள் தற்போது செயற்கை தொழில்நுட்ப நிறுவனத்தை அறிமுகம் செய்து வருகிறது. ChatGPTக்கு போட்டியாக xAI என்ற புதிய நிறுவனத்தை உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் எந்த […]
Continue reading …
பாஜக பிரமுகர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “திமுக ஆட்டம் இன்னும் 48 மணி நேரம் தான், அதன் பிறகு தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவுக்கு வருமா அல்லது ஆட்சியே முடிவுக்கு வருமா? என்பதை பார்ப்போம்” என்று பதிவு செய்துள்ளார். மூன்றாவது நீதிபதியின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தீர்ப்பை பொறுத்து தான் செந்தில் பாலாஜி […]
Continue reading …