Home » Posts tagged with » Netrikkan (Page 395)

மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல்!

Comments Off on மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல்!

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பிராட்வே பகுதியில் உள்ள உரிமம் புதுப்பிக்காத 70 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். நீண்ட நாட்களாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், வரி வாடகை செலுத்தாததால், கடை மற்றும் தொழில் செய்வோர், முறைப்படி, உரிமம் பெற்றும் வாடகை மற்றும் வரியினைச் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இன்று சென்னையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தொழில் வரி, நீண்டகால வாடகை நிலுவை மற்றும் தொழில் உரிமம் பெறாமல் இயங்கி வந்த 86 கடைகளுக்குச் சீல் வைத்து அதிரடி […]

Continue reading …

ஓபிஎஸ் பற்றி ஜெயக்குமார் விமர்சனம்!

Comments Off on ஓபிஎஸ் பற்றி ஜெயக்குமார் விமர்சனம்!

அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ் திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார்- என்று விமர்சித்துள்ளார். அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி மூன்று அணிகளாக பிரிந்துள்ளது. இந்நிலையில், மூன்று தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியில், அதிமுக எதிக்கட்சித் தலைவர், எடப்பாடி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார், “கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அதிமுக அலுவலகத்தை ரவுடிகளுடன் வந்து, இடித்து, புத்தகங்களை எடுத்துச் சென்றால் எப்படி […]

Continue reading …

ஜெகன் மோகன் ரெட்டியை சாடிய சந்திரபாபு நாயுடு!

Comments Off on ஜெகன் மோகன் ரெட்டியை சாடிய சந்திரபாபு நாயுடு!

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறாது என கணித்துள்ளார் சந்திரபாபு நாயுடு. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரப் பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறாது என கணித்துள்ளார். ஆம், 175 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் முதல்வர் கூறினார். முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தனது தொகுதியான புலிவெந்துலா தொகுதியில் தோல்வியடைவார் […]

Continue reading …

விஞ்ஞானிகள் திருப்பதியில் பிரார்த்தனை!

Comments Off on விஞ்ஞானிகள் திருப்பதியில் பிரார்த்தனை!
விஞ்ஞானிகள் திருப்பதியில் பிரார்த்தனை!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செயற்கைக்கொள் செலுத்த உள்ளதால் இஸ்ரோவை சேர்ந்த விஞ்ஞானிகள் சிறப்பு பூஜை செய்வதற்காக வந்திருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நாளை இந்தியா மற்றும் பூடான் ஆகிய இரண்டு நாடுகளின் செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளின் குழுக்கள் வந்து செயற்கைக்கோளின் மாதிரி வரைபடத்துடன் ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். மேலும் தரிசனம் செய்த விஞ்ஞானிகளுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதம் […]

Continue reading …

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

Comments Off on வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

சென்னையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய மீண்டும் சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் உள்பட ஒரு சில திருத்தங்கள் செய்ய சமீபத்தில் சென்னையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக பெயரை சேர்க்கவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் தங்களது பெயர், முகவரி உள்பட திருத்தங்கள் செய்யவும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தேர்தல் […]

Continue reading …

சி.வி.சண்முகம் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு

Comments Off on சி.வி.சண்முகம் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழு காரணம் டிடிவி தினகரன் தான் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில், “ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் டிடிவி தினகரனால் தான் அவர் சிறைக்கு சென்றார். அதனால்தான் டிடிவி தினகரன் வீட்டைவிட்டு ஜெயலலிதா விரட்டியடித்தார். டிடிவி தினகரனை நம்பி சென்ற 18 எம்எல்ஏக்கள் இன்று அனாதையாக உள்ளனர். அவரை நம்பியவர்கள் தான் ஏமாந்து போனார்கள். டிடிவி தினகரன் ஒரு துரோகி, அம்மாவுக்கும் […]

Continue reading …

அண்டை நாட்டின் அதிரடி அறிவிப்பு!

Comments Off on அண்டை நாட்டின் அதிரடி அறிவிப்பு!

அண்டை நாடான இலங்கை போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. போதை பொருள் உலகம் முழுதும் மிக வேகமாக பரவி வருகிறது. போதைப்பொருளை தடுப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை ஐந்து கிராமிற்கு அதிகமாக போதை பொருள் வைத்திருந்தால் அல்லது விற்பனையில் ஈடுபட்டாலும் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டத் திருத்தம் […]

Continue reading …

ஜனநாயக மாதர் சங்க பெண்கள் கைது!

Comments Off on ஜனநாயக மாதர் சங்க பெண்கள் கைது!
ஜனநாயக மாதர் சங்க பெண்கள் கைது!

ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த 24 பெண்கள் சென்னையில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 24 பேர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று காவல்துறையினர் கைது செய்தனர். […]

Continue reading …

உதயநிதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

Comments Off on உதயநிதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

சேப்பாக்கம் தொகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்- மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே தொகுதியில் உதயநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் ரவி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில், “உதயநிதி ஸ்டாலின் தனது வேட்பு மனுவில் தவறான மற்றும் பொய்யான தகவல்களை அளித்துள்ளார். […]

Continue reading …

டிக்டாக்கின் வேலைவாய்ப்பு செய்தி!

Comments Off on டிக்டாக்கின் வேலைவாய்ப்பு செய்தி!

பல முன்னணி நிறுவனங்களும் வேலைநீக்கம் செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் டிக்டாக் மட்டும் வேலைவாய்ப்பு செய்தியை அறிவித்துள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், பேஸ்புக், டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன. பொருளாதார மந்தநிலை பணவீக்கம் மற்றும் அதிக செலவுகள் காரணமாக ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்பட்டதாக காரணங்கள் கூறப்பட்டன. டிக்டாக் நிறுவனம் 3,000 ஊழியர்களை பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் […]

Continue reading …