
நீதிமன்றம் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் தலையிட முடியாது என மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் அடிக்கடி மாற்றப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தேர்தல் ஆணையர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமனம் என்பது மத்திய அரசின் தனிப்பட்ட அதிகாரம் என்றும் தகுதியற்ற நபர்கள் […]
Continue reading …
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உலகப்புகழ்பெற்ற திருவண்ணாமலைக்கு தீபத்திருவிழா நடைபெற இருப்பதை அடுத்து 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. திருவண்ணாமலையில் தீபத்திருவிழா வரும் டிசம்பர் 6ம் தேதி மற்றும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துதுறை முடிவு செய்துள்ளது. பக்தர்களின் வருகையை பொருத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் தயாராக இருப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை […]
Continue reading …
நடிகை சமந்தா மறுபடியும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மறுபடியும் வெளியான தகவல் உண்மையல்ல என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகை சமந்தா உடல்நிலை மீண்டும் சிறிது மோசமாக இருப்பதாக ஒரு சில இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. அதற்கு சமந்தா தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். சமந்தா ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி முற்றிலும் தவறானது. சமந்தா வீட்டில்தான் இருக்கிறார். அவரது உடல் நலம் நல்ல படியாக இருக்கிறது. சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் […]
Continue reading …
தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பிரபலமானது. அடுத்தடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அவ்வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக ரிலீசான “காந்தாரா” திரைப்படம் பாராட்டுகளைப் பெற்றதோடு அல்லாமல் இந்தியா முழுதும் வசூலில் கலக்கி வருகிறது. ஆனால் இத்திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். உலகம் முழுதும் இத்திரைப்படம் சுமார் 400 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 […]
Continue reading …
விலங்குகள் நலவாரியம் நடிகர் விஜய் நடித்துள்ள “வாரிசு’’ படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமல்லாது கேரளம், ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் ரசிகர்கள் உள்ளனர். தெலுங்கு சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு நிகரான பட்ஜெட்டில், தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிப்பில், வம்சி இயக்கத்தில், விஜய்- மற்றும் ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் “வாரிசு.” படம் வரும் பொங்கல்- பண்டிகையொட்டி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளில் படக்குழு மும்முரமான ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் “ரஞ்சிதமே” பாடலும் ரிலீசானது. […]
Continue reading …
கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி செல்வராசு வரும் நவம்பர் 28ம் தேதி முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களும், மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளும் டெல்டா மாவட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த டெல்டா பகுதிகளை தொடர்ந்து தெற்கு ரயில்வேத்துறை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியுள்ள நாகை தொகுதி எம்.பி. செல்வராசு, இதைக் கண்டித்து, ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறும்போது, “டெல்டா பகுதிகளை […]
Continue reading …
டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் அமமுக இருக்கும் என்று அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து அரசியல் கட்சிகள் அந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணிகளும் இம்முறை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தலில் திமுகவை எந்த கூட்டணி வீழ்த்துகிறதோ, அந்த கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இருக்கும் என்று […]
Continue reading …
சென்னையில் காவல்துறை பிராங்க் வீடியோ எடுக்கும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்துள்ளது. சென்னையை சேர்ந்த ரோகித் குமார் வீடியோ வெளியிடும் கட்டெறும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய் மணிவேல், நாகை 360 ஆகிய ஐந்து யூடியூப் சேனல்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். ரோகித் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். பிராங்க் வீடியோக்களால் பாதிக்கப்படும் மக்கள் […]
Continue reading …
திருநெல்வேலியில் தன் மகளையே கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து அருகே பாலாமடை பகுதியில் நர்சிங் படிக்கும் 19 வயது அருணா என்ற இளம்பெண்ணை அவரது தாயாரே கொலை செய்துள்ளார். மகளை கொலை செய்த பின்னர் தாய் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். நர்சிங் படித்து வந்த அருணா, அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை காதல் […]
Continue reading …
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மழை அதிகமாக பெய்தது. அதன்பின் அதில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி தற்போது கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வங்க கடலில் […]
Continue reading …