அசாம் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்யும் கனமழையால் 68 பேர் உயிரிழந்துள்ளனர். 30 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கி இருப்பதாகவும், இதில் 48 லட்சத்துக்கும் அதிகமான பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அசாம் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
அசாமில் ஜோர்ஹாட், திப்ருகார், தின்சுகியா போன்ற சில மாவட்டங்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெள்ள பெருக்கல் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் முழுவதும் 487 நிவாரண முகாம் அமைக்கப்ட்டுள்ளது. மேலும், இதில் தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் மீட்பு வேலையில் செய்யப்பட்டு வருகின்றனர்.