நெல்லையில் நிறைவுற்ற திட்ட பணிகளை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு. அப்பாவு தலைமையில்,நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் முடிவுற்ற பல்வேறு திட்ட பணிகளை திறந்து வைத்தும்,புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் விழாப் பேருரையாற்றினார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா ப கார்த்திகேயன் ,நகராட்சி நிர்வாக இயக்குனர் சு.சிவராசு, நாடாளுமன்ற சட்டமன்ற ஞானதிரவியம்,மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மேயர் சரவணன், துணை மேயர் கே ஆர் ராஜு,பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப்,நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன்,மாவட்ட ஊராட்சித் தலைவர் வி எஸ் ஆர் ஜெகதீஷ்,மற்றும் உள்ளாச்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.