இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் இடம்பெறுவது இதுவே….

Filed under: Uncategory,விளையாட்டு |

ஆஸ்திரேலியா செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணியில் நான்கு தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்

இப்போது இந்திய அணியில் வருன் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், நடராஜன் மற்றும் அஸ்வின் ஆகியோர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயணத்திற்கு செல்லும் அணியில் இடம் பெற்று இருக்கின்றன. இதில் வாஷிங்டன் சுந்தரும் , அஷ்வினும் ஏற்கனவே இந்திய அணியில் விளையாடி இருக்கின்றனர். இதில் புதுமுகங்கள் யாரென்றால் நடராஜனும் , வருன் சக்கரவர்த்தியும் தான். இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் வலதுகை சுழற்பந்து வீச்சாளரான வருன் சக்கரவர்த்தி எதிரணி மட்டையாளர்களை மிரட்டி வருகிறார்

தோனி உள்ளிட்ட மிக முக்கியமான வீரர்களின் விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் வலுவான அணியாக கருதப்படும் டெல்லிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்களப்படுத்தினார். 11 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல வாஷிங்டன் சுந்தர் பெங்களூர் அணிக்காக விளையாடி சிறப்பான பங்களிப்பை செலுத்தி வருகிறார்.

அதிக விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் கூட குறைவான ரன்களையே ஒவ்வொரு போட்டியிலும் கொடுத்து வருகிறார். நடப்பு சீசனில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் இவரது பவுலிங்கில் எக்கனாமிக் வெறும் 5.7 இரண்டு மட்டுமே. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வருன் சக்கரவர்த்தி இதுவரை விளையாடியதில்லை அதேபோல அவர் ரஞ்சி போட்டிகளிலும் தமிழக அணி சார்பாக விளையாடவில்லை.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜன் மிக அற்புதமாக பந்து வீசி வருகிறார். குறிப்பாக அதிகமாக யார்க்கர் பந்துகளை வீசி கிரிக்கெட் உலகின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளார். சேலத்தைச் சேர்ந்த நடராஜனும் தமிழக ரஞ்சி அணியில் விளையாடியதில்லை ஆனால் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடி அதற்காக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.அடுத்ததாக அஷ்வின் 2010 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக பந்துவீசினார். இதனையடுத்து அந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அஸ்வினுக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதன்பின்பு அவர் இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்துள்ளார்.

இந்த வாய்ப்பு எல்லாவற்றுக்கும் மூல காரணமாக ஐபிஎல் உள்ளது என்பதை மறுக்க முடியாது.