இலங்கைக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் எச்சரிக்கை!

Filed under: உலகம் |

இலங்கை ரிசர்வ் வங்கியின் கவர்னர் இலங்கையின் பொருளாதார நிலை இதே ரீதியில் சென்றால் சோமாலியா ஜிம்பாப்வே போன்று இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

FILE PHOTO: People walk at the Central Bank of Sri Lanka building in Colombo February 12, 2013. REUTERS/Dinuka Liyanawatte

இலங்கையில் பிரதமர் பதவி விலகி மூன்று நாட்களாகி விட்டது. ஆனால் இதுவரை புதிய பிரதமர் நியமிக்கப்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் கடும் வீழ்ச்சியடையும். இதனை அடுத்து தான் தனது பதவியை ராஜினாமா செய்வது தவிர வேறு வழியில்லை என்றும் இலங்கை ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவருடைய எச்சரிக்கைக்கு பிறகு இன்று ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.