ஒன்றரை லிட்டர் விஸ்கியை 18 வினாடிகளில் குடித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்…

Filed under: Uncategory,உலகம் |

அமெரிக்காவில் ஒரே கல்பாக ஒன்றரை முக்கால் லிட்டர் விஸ்கியைக் குடித்து சாதனை படைக்க இருந்த இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கான்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேலப்கன் என்ற 19 வயது இளைஞர் சக மாணவர்களுக்கு நடுவே சாதனை செய்வதாகக் கூறி 40 விழுக்காடு ஆல்கஹால் கொண்ட ஒன்றரை முக்கால் லிட்டர் விஸ்கியை குறைந்த நேரத்தில் குடிப்பதாக சவால் விடுத்திருந்தார்.

பின்னர் மாணவர்கள் எண்ணிக்கையைத் தொடங்கியதும் பாட்டிலைத் திறந்த அந்த இளைஞர் 18 வினாடிகளில் அவ்வளவு விஸ்கியையும் குடித்து உலக சாதனை படைத்ததாகக் கூறிக் கொண்டார்.

ஆனால் உடல் ஏற்றுக் கொள்ளும் அளவை விட அதிக ஆல்கஹாலை அருந்தியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜேலப் கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.