காவலர்கள் இழந்த கோடிகள்!

Filed under: Uncategory |

சென்னை காவல் ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கோடிக்கணக்கில் காவலர்கள் கிரிப்போடி கரன்சி மோசடியில் இழந்தது தெரியவந்துள்ளது.

சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் சுற்றறிக்கையில் கிரிப்டோகரன்சி மோசடியில் காவலர்களை கோடிக்கணக்கில் பணத்தை இழந்ததாக தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த இரண்டு காவலர்கள் கிரிப்டோகரன்சி மோசடியில் ஒன்றரை கோடி ரூபாய் இழந்துள்ளதால், சமூக வலைதளங்கள் மூலம் இதுபோன்ற மோசடி நிறுவனங்களை நம்பவேண்டாம் எனவும், அவர்களுக்கு சென்னை காவல்துறை ஆணையர் சங்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தங்களது ஊதியத்தை நியாயமான முறையில் வங்கிகளில் முதலீடு செய்யுங்கள் என்றும் அவர் காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கிரிப்டோகரன்சி மோசடியில் காவலர்களே கோடிக்கணக்கில் பணத்தை இழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.