நேபாளத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பத்தராய்க்கு கொரோனா உறுதி!

Filed under: உலகம் |

நேபாளத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பத்தராய்க்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

நேபாளத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என எட்டு மாதங்களுக்கு முன்பு தெரிவித்து அவருக்கு தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவருடைய சமூக வளையத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதில் எனக்கு நெகட்டிவ் என வந்தது.
பின்பு பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது எனக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மீண்டும் பரிசோதனை செய்ததில் எனக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

இதனால் கடந்த ஒரு வாரம் என்னை சந்தித்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.